தமிழக பாஜக தலைவராக நயினார் நாகேந்திரன் போட்டியின்றி தேர்வு

 
nainar

தமிழக பாஜக தலைவராக நயினார் நாகேந்திரன் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.

பாஜக தலைவர் பதவிக்கான விருப்பமனு  தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் முடிவடைந்த நிலையில் வேறு யாரும் விருப்பம் மனு தாக்கல் செய்யாததால் நயினார் நாகேந்திரன் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். நயினார் நாகேந்திரன் தேர்வு தொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு நாளை வெளியாகிறது.

யார் இந்த நயினார் நாகேந்திரன்?

ஆரம்பத்தில் அதிமுகவில் இருந்த நயினார் நாகேந்திரன், கடந்த 2001 தேர்தலில் திருநெல்வேலி தொகுதியிலிருந்து சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். மீண்டும் 10 ஆண்டுகால இடைவெளிக்கு பின்னர் 2011 தேர்தலில் மீண்டும் சட்டமன்றஉறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும்,  2001-2006 வரை நடைபெற்ற அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் மின்சாரத்துறை அமைச்சராகவும், தொழில்துறை அமைச்சராகவும் பணியாற்றினார். ஜெயலலிதா மறைவுக்கு பின் அதிமுகவில் முக்கியத்துவம் இல்லையென நயினார் அதிருப்தியில் இருந்தார். பின்னர் திடீரென அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திலிருந்து விலகி, 2017ம் ஆண்டு பாஜகவில் இணைந்து மாநில துணை தலைவரானார் நயினார்.  2019-ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தியப் பாரளுமன்றத் தேர்தலில் இராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். பின்னர் 2021-ஆம் ஆண்டில் நடைபெற்ற தேர்தலில் திருநெல்வேலி தொகுதியிலிருந்து, பாஜக சார்பில் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினராக உள்ளார்.