கடந்த ஆட்சிக்கு கொஞ்சமும் சளைத்ததல்ல தவெக ஆட்சி - நயினார் நாகேந்திரன் விமர்சனம்..!

 
1

பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள சமூகவலைதள பதிவில்,

கடந்த ஆட்சிக்கு கொஞ்சமும் சளைத்ததல்ல தவெக ஆட்சி! 

தேர்தலுக்கு முன்பு மாற்றத்திற்கான நேரம் என்று சூளுரைத்த தவெகவின் போலி பரப்புரையை நம்பிய தமிழக மக்களுக்கு, பெருத்த ஏமாற்றத்தை மட்டுமே கொடுத்துக் கொண்டிருக்கிறார் திரு. ஜோசப் விஜய் அவர்கள்.

பிற கட்சிகளுக்குள் புகுந்து குதிரை பேரம் பேசி எப்படி ஆட்களை உருவலாம் என்பதில் மட்டும் கவனம் செலுத்திக் கொண்டு, மாநிலத்தின் அடிப்படையான சட்டம் ஒழுங்கை கோட்டை விட்டு விட்டார்!

என நயினார் நாகேந்திரன் அந்த பதிவில் தெரிவித்துள்ளார்.