பாஜக சிறுபான்மை பிரிவின் தேசிய செயலாளர் கைது - நயினார் நாகேந்திரன் கண்டனம்!

வக்ஃப் திருத்த சட்டம் குறித்து மக்களிடம் விளக்கமாக எடுத்துரைப்பதற்காக சென்ற பாஜக-வின் சிறுபான்மை பிரிவின் தேசிய செயலாளர் திரு.சையத் இம்ப்ராஹிம் கைது செய்யப்பட்டது கடும் கண்டனத்திற்குறியது என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
வக்ஃப் திருத்த சட்டம் குறித்து மக்களிடம் விளக்கமாக எடுத்துரைப்பதற்காக, திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பகுதிக்கு பயணம் மேற்கொள்ளவிருந்த பாஜக-வின் சிறுபான்மை பிரிவின் தேசிய செயலாளர் திரு.சையத் இம்ப்ராஹிம் அவர்களை அங்கே செல்லவிடாமல் வீட்டுக்காவலில் வைத்த அறிவாலயம் அரசின் அராஜகப் போக்கு வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
மக்கள் நலனை முன்னெடுக்கும் பாஜக தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் மீது இவ்வாறு தொடர் அதிகார அடக்குமுறையைக் கையாளும் அறிவாலய அரசின் அக்கிரமங்களைத் தமிழக மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள், வரும் தேர்தலில் அதற்கான தக்க பதிலடியும் கொடுப்பார்கள் என குறிப்பிட்டுள்ளார்.