ஒரு கள்ள ஓட்டு கூட போட முடியாது - நயினார் நாகேந்திரன்
தமிழகத்தில் பீஹார் அலை வீசப்போகிறது, தேசிய ஜனநாயக கூட்டணி 2026 தேர்தலில் வெற்றி பெற்று இபிஎஸ் முதல்வராகுவது உறுதி ஆத்தூரில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

தமிழக பாஜக மாநில தலைவர் நைனார் நாகேந்திரன் தமிழகம் முழுவதும் தமிழகம் தலை நிமிர தமிழனின் பயணம் என்ற பெயரில் கடந்த சில மாதங்களாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அதைத் தொடர்ந்து சேலம் மாவட்டம் ஆத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு இன்று இரவு வருகை தந்த நைனார் நாகேந்திரன் ஆத்தூர் ராணிப்பேட்டையில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் நைனார் நாகேந்திரன் கலந்துகொண்டு பேசினார். அப்போது பேசிய அவர், தமிழகத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகள் மோசமாக உள்ளது என்றும் ,திமுக ஆட்சியில் கஞ்சா விற்பவர்கள் திமுகவில் பதவியில் இருப்பதாகவும், தமிழகத்தில் கடந்த நான்கு ஆண்டு காலத்தில் 7500 கொலை,கொள்ளைகள் நடைபெற்றுள்ளதாகவும் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு உள்ளதாகவும், தமிழக முழுவதும் கஞ்சா போதை அதிகளவில் விற்பனையாகிறது என்றும், பெண்கள் வெளியில் நட முடியாத அளவிற்கு ஆறு வயது முதல் 60 வயது பெண் வரை பாலியல் தொல்லைக்கு ஆளாகிறார்கள் என்றும், அமித்ஷாவும் மோடியும் இபிஎஸ்ஸும் சேர்ந்து உருவாக்கிய இந்தக் கூட்டணி 2026 தேர்தலில் வெற்றி பெறுவது உறுதி என்றும் பிகார் அலை தமிழகத்தில் வீசப்போகிறது என்றும் தேசிய ஜனநாயக கூட்டணியில் இபிஎஸ் முதல்வராவது உறுதி என்று பேசிய நாகேந்திரன், தமிழகத்திற்கு பாரதிய ஜனதா ஆட்சியில்14 லட்சம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றும், மத்திய அரசு பல்வேறு திட்டங்களை தமிழக அரசுக்கு வழங்கி உள்ளது என்றும், திமுக ஆட்சிக்கு வருவதற்கு முன்பு சொன்ன தேர்தல் வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றப்படவில்லை என்று குறை கூறிய நாகேந்திரன்
100 நாள் வேலை திட்டத்தை 150 நாட்களாக உயர்த்துவோம் என்று கூறினார்கள். ஆனால் அதனை செய்யவில்லை.
ஆனால் மோடி அவர்கள் 100 நாள் வேலையை 125 நாட்கள் வேலை வழங்குவோம் என்றும் அதற்குரிய தொகையை வங்கி கணக்கில் வைப்போம் என்று கூறியுள்ளார். தமிழகத்தில் விவசாயிகளுக்கு மாதம் 6000 ரூபாய் வீதம்இந்த மாவட்டத்தில் மட்டும் 24 ஆயிரம் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது என்றும், சார், எஸ் ஐ ஆர் என்றால் திமுகவினருக்கு பயம் தமிழகத்தில் 97 லட்சம் பேர் நீக்கப்பட்டுள்ளார்கள். அப்படி என்றால் இத்தனை ஆண்டுகளாக கள்ள ஓட்டு போடப்பட்டுள்ளது முதல்வரின் தொகுதியில் மட்டும் ஒரு லட்சம் பேர் நீக்கப்பட்டுள்ளார்கள் .இனி எந்த ஒரு வாக்குச்சாவடிகளும் திமுகவினர் கள்ள ஓட்டு போட முடியாத அளவிற்கு தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியினர்செயல்படுவார்கள்.

இன்று நடிகர்கள் கட்சி ஆரம்பித்து ஆட்சியைப் பிடிப்போம் என்கிறார்கள். ஒரு கவுன்சிலர் பதவியை கூட இல்லாதவர்கள் எல்லாம் இப்படி பேசுவார்கள் என்று பேசிய மகேந்திரன் வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெறுவது உறுதி என்றும் அதற்கு அனைவரும் ஒற்றுமையுடன் பணியாற்ற வேண்டுமென்றும் ஈபிஎஸ் தமிழக முதல்வர் ஆவது உறுதி என்று நைனார் நாகேந்திரன நம்பிக்கை தெரிவித்து பேசினார். இந்த கூட்டத்தில் முன்னாள் எம்பி ராமலிங்கம் அதிமுக மாவட்ட செயலாளர் இளங்கோவன் உள்பட மாநில மாவட்ட நிர்வாகிகள் மற்றும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கட்சி தொண்டர்கள் கலந்து கொண்டனர்.


