எம்ஜிஆர் கார் எண்ணில் நயினார் நாகேந்திரனுக்கு பிரசார வாகனம்!
அரியலூர் பாஜகவின் முன்னாள் தலைவர் ஐயப்பன், சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்திற்காக 4777 என்ற எண் கொண்ட பிரச்சார வாகனத்தை நயினார் நாகேந்திரனுக்காக பிரத்யேகமாக தயார் செய்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் இன்னும் 10 மாதங்களில் நடைபெறவுள்ள நிலையில், அரசியல் கூட்டணிகள், வியூகங்கள், பிரச்சாரங்கள் - இவை அனைத்தும் வேகமாக முன்னேறி வருகின்றன. அந்தவகையில் ஈபிஎஸ், அன்புமணி, பிரேமலதாவை தொடர்ந்து தமிழகம் முழுவதும் ஆக. 17ம் தேதி நெல்லையில் இருந்து தனது சுற்றுப்பயணத்தை நயினார் நாகேந்திரன் தொடங்க உள்ளார். நேரடியாக மக்களை களத்தில் சந்தித்து பாஜகவின் சாதனைகள் மற்றும் நலத்திட்டங்களை எடுத்துரைக்கவுள்ளார்.
இந்நிலையில் சட்டமன்ற தேர்தல் பிரசாரத்திற்காக 4777 என்ற எண் கொண்ட பிரசார வாகனத்தை நயினார் நாகேந்திரனுக்காக பிரத்யேகமாக தயார் செய்துள்ளார் அரியலூர் பாஜக-வின் முன்னாள் தலைவர் ஐயப்பன். முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர் பயன்படுத்திய காரின் எண் இது என்பதை அறிந்தவுடன், நயினார் நாகேந்திரன் ஆர்வமாக அவரே வாகனத்தை இயக்கி திருநெல்வேலி மாநகரை வலம் வந்துள்ளார்.

