திருப்பரங்குன்றத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட நயினார் நாகேந்திரன் கைது!

 
ச் ச்

திருப்பரங்குன்றத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கைது செய்யப்பட்டுள்ளார்.


திருப்பரங்குன்ற மலை உச்சியில் தீபமேற்றச் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. அதற்கு காவல்துறையினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதற்கு எதிராக திருப்பரங்குன்றம் மலை முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், ஹெச்.ராஜா உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். 16 கால் மண்டபம் அருகே தடுப்புகள் அமைத்து தடுத்து நிறுத்திய காவல்துறையினர், கலைந்து செல்ல அறிவுறுத்தியும் கலைய மறுத்ததால் காவல்துறையினர் கைது செய்தனர். கைது செய்தவர்களை அழைத்து செல்லும் வாகனத்தை முற்றுகையிட்டு பாஜகவினர், இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.