நாகாலாந்து ஆளுநர் இல.கணேசன் காலமானார்
Updated: Aug 15, 2025, 19:09 IST1755265191074
நாகாலாந்து ஆளுநரும், பாஜக மூத்த தலைவருமான இல.கணேசன் உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 80.

நாகாலாந்து ஆளுநரும், பாஜக மூத்த தலைவருமான இல.கணேசன் உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 80. உடல்நலக்குறைவால் கடந்த 8 ஆம் தேதி அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக இல.கணேசன் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி அவரது உயிர் பிரிந்தது.
தஞ்சாவூரைச் சேர்ந்தவர் இல.கணேசன். இவர் பாஜக தேசியக் குழுவின் முன்னாள் உறுப்பினரும் ஆவார். பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு மாநில செயலராக நியமிக்கப்படுவதற்கு முன்பு ராஷ்டிரிய சுயம்சேவக் சங்கத்தின் பிரச்சாரகராக இருந்தவர்.பின் கட்சியின் தேசிய செயலராகவும், கட்சியின் தேசிய துணைத்தலைவராகவும் பணியாற்றியவர்.பின்னர் கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

