நாகை - இலங்கை கப்பல் போக்குவரத்து மீண்டும் ஒத்திவைப்பு

 
ship

சர்வதேச அனுமதி கிடைக்காத காரணத்தால் நாகை முதல் இலங்கை கப்பல் சேவை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.வருகின்ற 19 ஆம் தேதி கப்பல் போக்குவரத்து சேவை தொடங்கும் என டிக்கெட் முன்பதிவு செய்த பயணிகளிடம் தனியார் நிறுவனம் வருத்தம் தெரிவித்துள்ளது.

kappal

நாகையில் இருந்து இலங்கைக்கு பிரதமர் நரேந்திரமோடி தொடங்கி வைத்த செரியாபாணி கப்பல் சேவை நிறுத்தப்பட்டது. அதனை தொடர்ந்து தனியார் நிறுவனத்திடம் கப்பல் சேவையை ஒன்றிய அரசு ஒப்படைத்த நிலையில் கடந்த 13 ஆம் தேதி கப்பல் சேவை தொடங்கும் என அந்த தனியார் நிறுவனம் அறிவித்தது. சிவகங்கை என்ற கப்பல் அந்தமானில் இருந்து கொண்டுவரப்பட்டு சென்னை துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ள நிலையில் சில சட்டரீதியான அனுமதிகள் கிடைக்காத காரணத்தால் கப்பல் சேவை வருகின்ற 19 ஆம் தேதி தொடங்கும் என தனியார் நிறுவனம் தெரிவித்துள்ளது. 


குறிப்பாக தொடர்ந்து தேதி தள்ளி போவதால் டிக்கெட் முன்பதிவு செய்த பயணிகளிடம் வருத்தம் தெரிவித்து தனியார் நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்திய எல்லைக்குள் இயக்கும் அனுமதி மட்டுமே பெற்றிருந்த சிவகங்கை கப்பலுக்கு வணிக கடல் துறையின் சர்வதேச பதிவு எண் கிடைக்காத காரணத்தால் ஏற்கனவே 13 ஆம் தேதி அறிவிக்கப்பட்டிருந்த கப்பல் போக்குவரத்து சேவை அறிவிப்பு திரும்ப பெறப்பட்டுள்ளது. குறிப்பாக தமிழ்நாடு கடல்சார்வாரிய துணைத் தலைவர், தலைமை செயல் அலுவலர் செல்வராஜ் நாகை துறைமுகத்தில் ஆய்வு மேற்கொண்ட பிறகே கப்பல் போக்குவரத்து சேவை தொடங்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. இரண்டாவது முறையாக கப்பல் போக்குவரத்து சேவை தொடங்க உள்ளதால் ஏற்கனவே இலங்கை செல்வதற்கு டிக்கெட் முன் பதிவு செய்துள்ள பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். நாகை முதல் இலங்கை காங்கேசன்துறைக்கு கப்பல் போக்குவரத்து சேவையை தனியார் நிறுவனத்திடம் ஒன்றிய அரசு ஒப்படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.