‘இளைய சமுதாயத்திற்கு ஒரு விடிவெள்ளியாக ஒளிரவும்’ - உதயநிதிக்கு நடிகர் சங்கம் வாழ்த்து..

 
மீ டூ புகார்களை விசாரிக்க சிறப்பு குழு: நடிகர் சங்க தலைவர் நாசர் தகவல்


"இளைய சமுதாயத்திற்கு ஒரு விடிவெள்ளியாக ஒளிரவும், தமிழ்நாட்டை உலகமே உற்று நோக்கும் வகையில் சீரிய முறையில் தங்களின் பணி சிறக்கவும் வாழ்த்துகள்"  என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் வாழ்த்து தெரிவித்துள்ளது.  

இதுகுறித்து தென்னிந்திய நடிகர்கள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பேரன்பிற்கும் மரியாதைக்குரிய தமிழக துணை முதலமைச்சர் திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு,  

உதயநிதி ஸ்டாலின்
    
வணக்கம், தமிழ்நாடு சட்டப்பேரவை உறுப்பினரும், தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினருமான தாங்கள் தமிழக அமைச்சரவையில் துணை முதலமைச்சராக பதவி ஏற்றுள்ள தங்களுக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பாக உள்ளார்ந்த மகிழ்ச்சியையும், மனமார்ந்த பாராட்டுகளையும் மிகுந்த பெருமையுடன் தெரிவித்துக்கொள்கிறோம். 

மேலும், இளைய சமுதாயத்திற்கு ஒரு விடிவெள்ளியாக ஒளிரவும் நம் தமிழகத்தை உலகமே உற்று நோக்கும் வகையில் சீரிய முறையில் தங்களின் பணி சிறக்க வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறோம்.” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.  
 ‘இளைய சமுதாயத்திற்கு ஒரு விடிவெள்ளியாக ஒளிரவும்’ - உதயநிதிக்கு நடிகர் சங்கம் வாழ்த்து..