இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை பெற்றுத்தரும் ‘நான் முதல்வன்’ திட்டம்!

 
tn

நான் முதல்வன் திட்டம் மாணவ, மாணவிகளின் தனித்திறமைகளை அடையாளம் கண்டு ஊக்குவிப்பதற்காக தொடங்கப்பட்டது. ஆண்டுக்கு 10 லட்சம் இளைஞர்களை படிப்பு, அறிவு ,திறன் ,சிந்தனை ,ஆற்றலில் மேம்படுத்துவது இந்த திட்டத்தின் இலக்காக உள்ளது . மாணவர்களுக்கு பயிற்சி வழங்குவது , வல்லுநர்களை கண்டறிவது திறமைக்கேற்ப அவர்களுக்கு வேலை கிடைப்பதை உறுதி செய்வது ஆகியவை இந்த திட்டத்தின் நோக்கம்.  இத்திட்டத்தின் கீழ் பள்ளி , கல்லூரி மாணவர்கள் , யுபிஎஸ்சி உள்ளிட்ட மத்திய மாநில போட்டித் தேர்வுகளுக்கு பயிற்சி பெறுவதற்கான பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு இருக்கின்றன. 

stalin

இந்நிலையில் தமிழ்நாடு அரசின் 'நான் முதல்வன் வேலைவாய்ப்பு திட்டம் 2024'-ன் மூலம் சேலம், கள்ளக்குறிச்சி அரியலூர், கிருஷ்ணகிரி ஆகிய 4 மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான கலை, அறிவியல் கல்லூரி மாணவர்கள் வேலை வாய்ப்புகளைப் பெற்றுள்ளனர்.  

stalin

2022-23 நிதியாண்டில், இத்திட்டத்தின் மூலம் 1.19 லட்சம் மாணவர்கள் வேலை வாய்ப்புகளை பெற்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.