பாமகவை விட அதிக வாக்கு சதவீதத்தை பெற்ற நாம் தமிழர் கட்சி!!
மக்களவைத் தேர்தலில் ஆறு தொகுதிகளில் மூன்றாம் இடத்தை பிடித்து நாம் தமிழர் கட்சி கவனம் ஈர்த்துள்ளது.
நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி 40 தொகுதிகளிலும் தனித்து களம் கண்டது . மக்களவை தேர்தல் முடிவுகள் நேற்று வெளியான நிலையில் நாம் தமிழர் கட்சி அனைத்து தொகுதிகளிலும் தோல்வியை தழுவி டெபாசிட் இழந்தது. இருப்பினும் ஆறு தொகுதிகளில் மூன்றாம் இடத்தை பிடித்து கவனம் ஈர்த்துள்ளது.
கன்னியாகுமரி, கள்ளக்குறிச்சி, நாகப்பட்டினம் ,ஈரோடு ,திருச்சி, புதுச்சேரி ஆகிய இடங்களில் மூன்றாம் இடத்தை பிடித்துள்ளது. இதில் இரண்டு இடங்களில் அதிமுகவையும் , இரண்டு இடங்களில் தமிழ் மாநில காங்கிரஸையும் , தலா ஒரு இடங்களில் பாஜக , பாமக மற்றும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் ஆகிய கட்சிகளையும் பின்னுக்கு தள்ளி மூன்றாம் இடத்தை பிடித்துள்ளது. மீதமுள்ள 33 தொகுதிகளிலும் நான்காம் இடத்தை பிடித்துள்ளது.
குறிப்பாக பாமகவை விட தமிழ்நாட்டில் நாம் தமிழர் கட்சி இரண்டு மடங்கு அதிக வாக்கு சதவீதத்தை தேர்தலில் பெற்றுள்ளது நாம் தமிழர் கட்சி 8.22% பெற்றுள்ளது.
அவர்கள் வழக்கமாக வைத்திருந்த கரும்பு விவசாயி சின்னம் மறுக்கப்பட்டு ஒலிவாங்கி சின்னம் புதிதாக கொடுக்கப்பட்டது. அதுவும் தேர்தலுக்கு சில தினங்களுக்கு முன்பே கொடுக்கப்பட்டும் அதை வைத்து குறிப்பிட்ட வாக்கு சதவீதத்தை நாம் தமிழர் கட்சி பெற்றுள்ளது.