"பிளாக்கில் டிக்கெட் விற்று அமைச்சரானவர்கள் நேர்மையைப் பற்றி என்னிடம் பேசுகிறார்கள்"- சீமான்

 
"பிளாக்கில் டிக்கெட் விற்று அமைச்சரானவர்கள் நேர்மையைப் பற்றி என்னிடம் பேசுகிறார்கள்"- சீமான் 

அம்பாசமுத்திரத்தில் நான் பொதுவேட்பாளரா? யார் சொன்னது? பொது வேட்பாளர் என திமுக சொன்னதா? அதிமுக சொன்னதா? என நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். 


நெல்லையில் நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றிய சீமான், "அம்பாசமுத்திரத்தில் பணமும் அதிகாரமும் வேலை செய்யும். என்னை சட்டமன்றத்திற்கு எப்படியாவது வர விடக்கூடாது என தடுக்க நினைப்பார்கள். தெருத்தெருவாக நடந்து மக்கள் மனதை வென்று சட்டமன்றம் செல்வோம். நான் அம்பை தொகுதியை வென்றால், அது சிறந்த தொகுதியாக மாறும். நான் மாநிலத்தை வென்றால் சிறந்த மாநிலமாக மாற்றுவேன். எல்லாம் மாறும்.  அம்பாசமுத்திரம் இடைத்தேர்தலில் என்னைப் பொது வேட்பாளராக திமுகவோ, அதிமுகவோ அல்லது நானோ அறிவிக்கவில்லை எத்தனை முறை தோற்றாலும் யாரிடமும் ஆதரவு கேட்கமாட்டேன் என்னைப் பொது வேட்பாளராக அறிவித்து விடுவார்களோ என எதிர்க்கட்சியினர் அஞ்சுகின்றனர். கடைசியாக ஆறு பந்து தான் இருக்கு..நாம அடித்து தான் ஆட வேண்டும்...நான் எத்தனை முறை தோற்றாலும் சரி..யாரிடமும் ஆதரவு கேட்க மாட்டேன். படித்துச் சொன்னால் யாரும் கேட்கமாட்டீர்கள், நடித்துச் சொன்னால் தான் கேட்கிறார்கள். அதனால் தான் நான் நடிக்கப் போய்விட்டேன். 

காசு கொடுத்து ஓட்டு வாங்குற தேர்தலில்தான் தோற்றேன்; லட்சியத்தில் உறுதிகொண்டவர்களை வீழ்த்த முடியாது. நான் முதல்வராக இருந்திருந்தால் திருப்பரங்குன்றம் பிரச்சினையை அரை மணி நேரத்தில் தீர்த்து வைத்திருப்பேன். என்னை பதவி வெறி பிடித்தவன் என சொல்கிறார்கள். பதவி வெறி இருந்தால், என்றோ யாருடனோ கூட்டணி வைத்து இன்று அமைச்சராகி இருப்பேன். பணத்து ஆசை, பதவி ஆசை இல்லாதவன் நான். தோற்றுக் கொண்டே இருப்பவன் தான் வீரன். வாக்கிற்கு காசு வாங்காமல், வாக்கு செலுத்திய யாராவது என்னை விரல் நீட்டி பேச சொல்லுங்கள். சீர்கெட்ட ஆட்சியை ஒரு தலைவன் நடத்துகிறார் என்றால் அதை தேர்ந்தெடுத்தது மக்களின் தவறு. ஐபிஎஸ், ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு குறுஞ்செய்தி அனுப்புகிறார்கள்; என்ன நடக்கிறது எனத் தெரியவில்லை. பிளாக்கில் டிக்கெட் விற்று அமைச்சரானவர்கள் நேர்மையைப் பற்றி என்னிடம் பேசுகிறார்கள்" என விமரசித்தார்.