“தமிழின் பெருமையை பிரதமர் மோடி உயர்த்தி பிடிக்கிறார்”- சீமான் பேச்சு

தமிழின் பெருமையை பிரதமர் மோடி உயர்த்தி பிடிக்கிறார் - சீமான் பேச்சுபிரதமர் தனது வெளிநாட்டு பயணங்களில் தமிழின் பெருமையை தொடர்ந்து உயர்த்திப் பிடிக்கிறார் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.
எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக நிகழ்ச்சியில் உரையாற்றிய நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், “தாய்மொழியை தெளிவுற கற்றால் பிற மொழிகளை எளிதாக கற்கலாம். அமெரிக்காவில் பள்ளிக்கூடம் போகாதவர்கள் கூட ஆங்கிலம் பேசுவான். யாசகர்கள் கூட ஆங்கிலத்தில் பிச்சை எடுப்பார்கள். அது அறிவா? உலகத்திலே தன் தாய் மொழியை தன் பெயரோடு இணைத்து வாழும் ஒரே இனம் தமிழன் தான். இந்த நாட்டை ஒரு தமிழன் ஆளும் காலம் வரும். நாம் வணங்கும் தெய்வம் எல்லாமே கருப்பு தான், அந்த திமிர் நமக்கு இருக்க வேண்டும்.
பிரதமர் தனது வெளிநாட்டு பயணங்களில் தமிழின் பெருமையை தொடர்ந்து உயர்த்திப் பிடிக்கிறார். வெளிநாடுகளுக்குச் செல்லும் ஒவ்வொரு முறையும் தமிழ் மொழியின் பெருமையை பிரதமர் மோடி பரப்பிவருகிறார். உலகின் முதன்மை மொழி தமிழ் எங்கள் நாட்டில் இருக்கிறது என பிரதமர் மோடி வெளிநாட்டு பயணங்களில் குறிப்பிடுகிறார். தமிழ் எங்கள் நாட்டில் இருப்பது எங்களுக்கு பெருமை என்று ஒவ்வொரு நாட்டிற்கும் செல்லும்போது, பிரதமர் மோடி கூறுகிறார். பல நாடுகளை சேர்ந்த மக்கள் தமிழ் மொழியை கற்க பேரார்வம் என பிரதமர் கூறுகிறார். பா.ஜ.க. என்ற ஒரு கட்சி தமிழ்நாட்டில் வளர்கிறது என்று தன்னுடைய செயலாற்றலால் நிகழ்த்தி காட்டியவர் அண்ணாமலை. இந்த உயரத்துக்கு நான் வளர காரணம் என் பேச்சு... எங்க அப்பா, தாத்தா யாரும் முதல்வர் கிடையாது. எனக்கு எந்த பின்புலமும் கிடையாது. ஒரு காட்டு கிராமத்தில் தான் பிறந்து வளர்ந்தேன்” என பேசினார்.