உண்டியலில் வெடிகுண்டை போட்டால் அது எங்களுடையது என சொல்வார்களா?- சீமான் கேள்வி

 
சீமான்

திருச்சியில் நாம் தமிழர் கட்சி சார்பில் ‘அண்ணனுடன் ஆயிரம் பேர்’ என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. 

சீமான்


இதில் கலந்துகொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், “கேரளாவில் இருந்து மருத்துவக் கழிவுகளை தமிழகத்தில் கொட்டுவது கடந்த 20 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு முறையும் அது போராடி நாங்கள் தடுத்து வருகிறோம். புகார் அளித்தாலும் அதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. கேராளவில் தமிழக கழிவுகளை எடுத்து சென்று கொட்டினால் அந்த மாநிலத்தின் மக்கள் அதை எதிர்ப்பார்கள். தமிழகத்தின் வளங்களை கொள்ளையடித்து சென்று விட்டு கழிவுகளை இங்கு வந்து கொட்டுகிறார்கள். இந்த பிரச்சனை இந்த ஆட்சியில் மட்டுமல்ல சென்ற ஆட்சியிலிருந்தே நடக்கிறது. இது குறித்து யாரும் கண்டுக்கொள்வதில்லை. திமுக ஆட்சியின் சாதனைகள் என்ன என்பதை எப்படி பரணி பாடப்போகிறார்கள் என்பதை கேட்போம். வெள்ள பாதிப்புக்கு நிவாரணம் வழங்கப்படவில்லை. நீதிமன்ற வாயிலில் கொலை, மருத்துவமனைக்குள் கொலை, பள்ளிக்குள் கொலை என பல இடங்களில் கொலை நடக்கிறது. ஆசிரியர்களின் பல்வேறு கோரிக்கைகள் இன்னும் நிறைவேற்றப்படாமல் உள்ளது. விவசாயிகள், மீனவர்கள், மாணவர்கள் என பல்வேறு தரப்பினரும் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். மக்களை வீதியில் போராட வைத்துவிட்டு சிறந்த ஆட்சி தருகிறோம் என்கிறார்கள்,போராட்டங்களை எதிர்கொள்ள துணிவு இல்லாத ஆட்சியாளர்களாக இந்த ஆட்சியாளர்கள் உள்ளார்கள்.

இவர்களை உடனடியாக பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.. - சீமான் கோரிக்கை..

சென்னை திருப்போரூர் முருகன் கோயிலில் உண்டியலில் தவறுதலாக விழுந்த ஐஃபோனை திருப்பி தர முடியாது என இந்து சமய அறநிலைத்துறை சொல்வது எந்த விதத்தில் நியாயம் என்று தெரியவில்லை. ஒருவேளை உண்டியலில் வெடிகுண்டை தூக்கி போட்டு இருந்தால் என்ன செய்திருப்பார்கள்? அதுவும் எங்களுடையது என சொல்வார்களா? கோயில் உண்டியலில் விழுந்த செல்போனை வைத்து முருகன் யாரிடம் பேசப் போகிறார்? என  கிண்டலடித்தார்.