வருமான வரித்துறையினர்தான் எனக்கு பணம் தர வேண்டியிருக்கும்- சீமான்

 
குரூப் - 4 மூலம் ஆண்டுதோறும் 30,000 பணியிடங்களை நிரப்புக -  சீமான் கோரிக்கை..

வருமான வரித்துறையினர்தான் எனக்கு பணம் தர வேண்டியிருக்கும் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். 

seeman

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய சீமான், “வீட்டில் ஒன்றும் இல்லை என்றால் திறந்து காட்டிவிட்டு போகலாமே! அதிகாரிகளை சோதனையிட விடாமல் தடுத்து நிறுத்துவது தவறு. சோதனை தடுக்கப்படுகிறது என்றால் தவறி நடந்திருக்கிறது  என்று தானே அர்த்தம். எல்லாவற்றிலும் சரியாக இருக்கிறோம் என்றால் வருமான வரித்துறை சோதனையை அனுமதிக்க வேண்டும்.வருமான வரித்துறை அதிகாரிகள் முறையாக சோதனை நடத்துவது கிடையாது.

சோதனையில் 1000 கோடி சிக்கினால் அதற்கு அதிகாரிகள் 10 சதவீதம் கமிஷன் பெற்றுக்கொண்டு கண்துடைப்புக்கு சோதனை நடத்துகின்றனர்.  தேர்தல் நெருங்கிக்கொண்டிருக்கும் சமயத்தில், அனைவரையும் அச்சுறுத்தும் வகையில் பாஜக வருமான வரித்துறை சோதனையை நடத்துகிறது. நடிகர் விஜய் வீட்டில் சோதனை நடத்தப்பட்டது. சோதனைக்கு பின் கணக்கு சரியாக இருப்பதாக கூறிவிட்டு சென்றுவிட்டனர். விஜய் வீட்டில் சோதனை நடத்தப்பட்டது அவசியமற்றது. அவரை அசிங்கப்படுத்தவே இந்த நடவடிக்கை. காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்தபோதுகூட எதிர்த்து பேசிபவர்கள் வீடுகளில் வருமான வரித்துறையினர் மூலம் சோதனை நடத்தியது.

வருமான வரித்துறை சோதனையில் முடிவில், ஆவணமாக கைப்பற்றப்பட்டது எவ்வளவு? பணம் மற்றும் நகை எவ்வளவு பறிமுதல் செய்யப்பட்டது? சொத்துக்கள் எவ்வளவு பறிமுதல் செய்யப்பட்டது? என்பது குறித்து சொல்வதில்லை. சோழர்கள் முடியாட்சியில் குடியாட்சி செய்தார்கள் இவர்கள் குடியாட்சியில் முடியாட்சி செய்கிறார்கள். தமிழ் நாட்டில் ஆட்சியை பிடிக்க பாஜக நடத்தும் நாடகம்தான் செங்கோல் விவகாரம்.” என சாடினார்.