தவெக அரசின் ஏமாற்று வேலை - சீமான் விமர்சனம்

 
தவெக அரசின் ஏமாற்று வேலை - சீமான் விமர்சனம்

தாராபுரம் சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பாகப் போட்டியிடுகின்ற வேட்பாளர் அன்புத்தங்கை மு.கார்த்திகாவை ஆதரித்து இன்று 02-10-2026 தென்தாரை பெரிய காளியம்மன் கோவில் அருகில் பரப்புரை மேற்கொண்டார்.

பரப்புரையில் உரையாற்றிய சீமான், “ஆண்டுக்கு 6 சிலிண்டர் இலவசம் என்று கூறிவிட்டு ஆட்சிக்கு வந்ததும் 3 என்கிறார்கள். ரூ.1.20 லட்சம் ஆண்டு வருவாய் உள்ள குடும்பங்களுக்கு சிலிண்டர் என்பதெல்லாம் தவெகவின் ஏமாற்று வேலை. மருத்துவக் காப்பீடு ரூ.25 லட்சமாக உயர்த்தப்படும்; ஆனால் வருவாய் ரூ.2.20 லட்சம் தான் இருக்க வேண்டுமாம். நாட்டில் குடும்பத்தின் சராசரி ஆண்டு வருவாய் ரூ.4.27 லட்சமாக உள்ளது, இதெல்லாம் ஏமாற்று வேலை. ஆட்சிக்கு வந்ததும் 200 யூனிட் மின்சாரம் இலவசம் என்று கூறிவிட்டு கட்டணத்தை உயர்த்திவிட்டனர். ஆடு மாடு வளர்ப்பை அரசு பணி என்றேன். இப்போது இலவசமாக ஆடு, மாடு தருவதாகக் கூறுகின்றனர். இங்கு ஆட்சிதான் மாறியுள்ளது. ஆட்சிமுறை மாறவில்லை. வேட்டிக்கு பதில் கோட் ஷூட் போட்டு ஆட்சி நடக்கிறது. 110 நாள் வேலை, வருமானம், உழைப்பு, வாழ்வு என கட்டமைக்க வேண்டும். இங்கு வருமானமும் இல்லை, வேலையும் இல்லை. எங்களுடைய திறமையை நீங்கள் சட்டமன்றத்தில் பார்க்க வேண்டும்” என்றார்.