எதிர்க்கட்சியே இருக்கக் கூடாது என்பது எப்படிப்பட்ட ஜனநாயகம்?- தவெகவை விளாசிய சீமான்

 
எதிர்க்கட்சியே இருக்கக் கூடாது என்பது எப்படிப்பட்ட ஜனநாயகம்?

இடைத்தேர்தலை ஒட்டி திருப்பூர் தாராபுரம் தொகுதியில் நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் பிரசாரம் மேற்கொண்டார்.

பிரச்சாரத்தில் பேசிய சீமான், “மக்கள் பணத்தைத் தொடமாட்டோம் என்றவர்கள், மற்ற கட்சி எம்.எல்.ஏக்களை ராஜினாமா செய்ய வைத்தார்கள். ராஜினாமா செய்த எம்.எல்.ஏக்களை தங்கள் கட்சியில் போட்டியிட வைப்பது என்ன மாதிரியான அரசியல்? ஆளும்கட்சியில் இருந்தால்தான் நல்லது செய்யமுடியும் எனில் எதிர்க்கட்சியினர் நல்லது செய்ய மாட்டார்களா? எதிர்க்கட்சியே இருக்கக் கூடாது என்பது எப்படிப்பட்ட ஜனநாயகம்? எவ்வளவு பெரிய பயணமாக இருந்தாலும், ஒரு காலடி தடத்தில்தான் தொடங்கியாக வேண்டும். ஆட்சி மாறியிருக்கிறது; ஆட்சி முறை மாறவில்லை. No rules, only reels. தமிழ்நாட்டில் ஏன் மின்வெட்டு என்று கேட்டால், ‘பஞ்சாபை பார், பங்களாதேஷை பார்’ என்கிறார் அமைச்சர். 200 யூனிட் மின்சாரம் இலவசம் என்றார். தற்போது மின்சாரமே இல்லை, மின்சாரமே கனவாகத்தான் உள்ளது. மின் தடை என்று சொல்லக்கூடாது, மின் பற்றாக்குறை என்று சொல்லணுமாம்... வாக்குக்கு பணம் கொடுக்காமல் அங்கீகாரம் பெற்ற முதல் கட்சி நாம் தமிழர்தான் கூட்டத்தை பார்த்து மாஸ் என போட்ட ஓட்டு தற்போது தூசியாக மாறிவிட்டது” என்றார்.