ரூ.400 கோடி செலவு செய்து திமுகவினர் வெற்றி பெற்றுள்ளனர்- மேனகா

 
நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா மீது வழக்குப்பதிவு

ஈரோடு கிழக்கு தேர்தலில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா, 10 ஆயிரத்து 804 வாக்குகள் பெற்றுள்ளார். அவருக்கு தபால் வாக்குகளில் 10 வாக்குகள் கிடைத்தன.

கடந்த தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் வாக்கு சதவீதம் 7.65 சதவீதமாக இருந்த நிலையில் தற்போது 6.3 சதவீதமாக உள்ளது. நாம் தமிழர் கட்சி கடந்த 2021 ஆம் ஆண்டு தேர்தலில் வாங்கிய ஓட்டு- 11, 629, தற்போதைய தேர்தலில் வாங்கிய ஓட்டு- 10,804 ஆகும்.  நாம் தமிழர் கட்சி மற்றும் தேமுதிக வேட்பாளர்கள் மொத்தம் பதிவான வாக்குகளில் 6-ல் ஒரு பங்கை பெறாததால் டெபாசிட் இழந்தனர்.

இந்நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதி வாக்கு எண்ணும் மையத்தில் வாக்கு எண்ணிக்கையை முழுமையாக அமர்ந்து பார்வையிட்ட நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா வாக்கு எண்ணிக்கை பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், “10,804 ஓட்டு பெற்றுள்ளோம், கடந்த முறையை விட 825 ஓட்டுகள் குறைவாக பெற்றுள்ளோம். 39 லட்சம் மட்டும் செலவு பண்ணி தேர்தலில் ஈடுபட்டு இருந்தால் திமுக  கூட்டணி வெற்றி பெற்று இருக்காது . 400 கோடி ரூபாய் செலவு செய்து திமுக கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. மக்களின் வறுமையை பயன்படுத்தி திமுக பணம் கொடுத்து வெற்றி  பெற்றுள்ளது.

வெற்றி பெற்றால் 5 ஆயிரம் ரூபாய்க்கான டோக்கன் கொடுத்துள்ளார்கள். அதை மளிகை பொருட்களாகவும் வழங்கி உள்ளனர். வெற்றி பெறா விட்டாலும் மக்களுக்காக போராடுவோம்” எனக் கூறினார்.