சீமானின் அவதூறு பேச்சால் அடுத்தடுத்து விலகும் நா.த.க. நிர்வாகிகள்
Jan 12, 2025, 14:35 IST1736672748401

பெரியார் குறித்த சீமானின் அவதூறு பேச்சால் நாம் தமிழர் கட்சியில் இருந்து நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகுவது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தந்தை பெரியார் பற்றி சர்ச்சை கருத்துக்களை தெரிவித்த, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது தமிழகம் முழுவதும் பல்வேறு காவல் நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.
இந்நிலையில் சேலம் மாவட்ட நாம் தமிழர் கட்சி கொள்கை பரப்பு செயலாளர் அழகரசன், சேலம் மாநகர மாவட்ட வணிகர் பாசறை இணைச் செயலாளர் வசந்தகுமார் விலகியுள்ளார். சேலம் மேற்கு தொகுதி பொறுப்பாளர் பாஸ்கரன், ஓமலூர் தெற்கு ஒன்றிய பொறுப்பாளர் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டோர் கட்சியில் இருந்து விலகியுள்ளனர்.