நெல்லையில் அதிமுகவை முந்தி சென்ற நாம் தமிழர் கட்சி

 
Seeman

நாம் தமிழர் கட்சி சில தொகுதிகளில் மூன்றாம் இடமும், பல தொகுதிகளில் ஓரளவு கணிசமான வாக்குகளும் பெற்று வருகின்றன.

Image

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய மக்களவைத் தேர்தல் கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடந்து முடிந்தது.  தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகின்றன.  இந்தியா அளவில்  பொருத்தவரை பாஜக கூட்டணி முன்னிலை வகுத்து வருகிறது.  இருப்பினும் கருத்துக்கணிப்பு முடிவுகளை விட இந்தியா கூட்டணி அதிக இடங்களில் முன்னிலை பெற்று வருகிறது.  தமிழ்நாட்டைப் பொறுத்தவரை திமுக கூட்டணி முன்னிலை வகித்து வருகிறது.  குறிப்பாக தமிழகத்தில் பாஜகவுக்கு மிகப்பெரிய பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

Image

இந்நிலையில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, திருச்சி, ஈரோடு, ஸ்ரீபெரும்புதூர், நாகை, புதுச்சேரி ஆகிய இடங்களில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் மூன்றாம் இடத்தை பிடித்துள்ளன. தமிழகத்தில் நாம் தமிழர் கட்சியை விட பாஜக அதிக வாக்குகள் பெற்றால் கட்சியை கலைப்பேன் என சீமான் தெரிவித்திருந்த நிலையில்,  பெரும்பாலான தொகுதிகளில் பாஜக நாம் தமிழர் கட்சியை விட கூடுதல் வாக்குகள் பெற்றுள்ளது. நெல்லை முதல் சுற்றில் 4 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளர் முன்னிலையில் உள்ளார். காங்கிரஸ் 20,786, பாஜக- 16578, அதிமுக- 3765, நாம் தமிழர்- 4032 வாக்குகளை பெற்றுள்ளது. இதன்மூலம் அதிமுகவை விட நாம் தமிழர் கட்சி அதிக வாக்குகளை பெற்று அசத்தியுள்ளது.