“பழக வேண்டியது... அப்புறம் பணம் கேட்க வேண்டியது! எனக்கு முன்னாடி 3,4 பேர் கூட”- விஜயலட்சுமியை கொச்சையாக பேசிய சீமான்

 
பிரபாகரன் படம் வெட்டி ஒட்டப்பட்டதா? திராவிட நாய்கள்.. சீமான் பரபரப்பு பேட்டி

விஜயலட்சுமியை மெயின்டன் செய்ய மாதம் 30,000 கேட்டார், நான் அப்படி செய்தால் எனது மனைவி சோற்றில் விஷம் வைத்து கொன்றுவிடுவார், இப்படி பணம் பறிக்கும் செயலுக்கு என்ன பெயர் என நீங்களே சொல்லுங்கள் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.


தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக விமான மூலம் தூத்துக்குடி வாகைகுளம் விமான நிலையம் வருகை தந்த சீமான் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது பேசிய அவர், “ராமேஸ்வரத்தில் போராடிக் கொண்டிருக்கக்கூடிய மீனவர்களை நான்தான் கூறினேன் சாப்பிடாமல் உண்ணாவிரதம் இருப்பதை விட வேறு வழியில் தங்கள் போராட்டத்தை கொண்டு செல்லலாம் எனக் கூறினேன். அதனைத் தொடர்ந்துதான் மீனவர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

விஜயலட்சுமி தனது கண்ணீர் சீமானை சும்மா விடாது... எனக் கூறினார். எனக்கு முன்னாடி இதே போல் 4,5 பேரை பண்ணி வந்தால் அந்த வேலைக்கு பெயர் என்ன?  பழகுவது, வெளியே செல்வது, வம்படியாக வழக்கு கொடுப்பது, மிரட்டி பணம் கேட்பது, அதிகபட்சம் அவள் வைத்த கோரிக்கை மாசம் 30,000 கொடுத்து மெயின்டன் செய்து கொள்ளச் சொல்லுங்கள் எனல் கோரிக்கை வைத்தார். அப்போது எனது தந்தை என்ன பிரச்சனை எனக் கேட்டபோது, 30,000 கொடுத்து மெயின்டன் செய்ய சொல்கிறார் மெய்டன் செய்து கொள்ளவா? எனக் கேட்டேன். அப்படி வைத்துக் கொண்டால் உங்கள் மருமகள் சோற்றில் விஷம் வைத்து கொன்றுவிடுவார் என என் தந்தையிடம் கூறினேன். 

நீ கண்ணியமாக பேசவில்லை... எனது குடும்பத்தை எல்லாம் கண்ணியாகுறைவாக பேசுகிறாய்! நீ என்னை காதலித்தேன் என சொல்வது எவ்வளவு பெரிய ஏமாற்றுவேலை. இடை மரித்து பணம் பறித்தவரின் பெயர் என்ன? அவருக்கு என்ன பெயர் வைப்பீர்கள்? என்னை பாலியல் குற்றவாளி என சொல்வதன் காரணம். ஒரு பாலியல் குற்றவாளிக்காக மானங்கெட்ட அவளே இவ்வளவு பேசும்போது மானத்திற்காக உயிரை விட்டவன் இனத்தில் வந்த நான் எப்படி பேச வேண்டும். இதற்கு முன்பு நீங்கள் சந்தித்த ஆட்கள் எல்லாம் வேறு, உங்கள் முன்பு நிற்கக்கூடிய நான் வேறு, வரலாற்றிலேயே இப்போதுதான் சரியான எதிரியை சந்திக்கிறீர்கள். கவனமாக கையாளுங்கள்” என்றார்.