நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கார்த்திகா கைது..!!
தாராபுரம் சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தலின்போது, நாம் தமிழர் கட்சி சார்பில் கார்த்திகா வேட்பாளராகப் போட்டியிட்டார். தேர்தல் பிரச்சாரத்தின்போது நடைபெற்றதாகக் கூறப்படும் சில சம்பவங்கள் தொடர்பாக, கார்த்திகா மற்றும் நாம் தமிழர் கட்சியினர் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்திருந்தனர்.
குறிப்பாக, முதலமைச்சர் விஜய் பயணித்த பாதையில் போராட்டத்தில் ஈடுபட்டதாகவும், தேர்தல் காலத்தில் காவல் நிலையத்தை முற்றுகையிட்ட சம்பவம் தொடர்பாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்தச் சம்பவங்கள் தொடர்பாக கார்த்திகா மீது மூன்று வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டம், தாராபுரம் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் தவெக சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் சத்தியபாமாவை ஆதரித்து பிரசாரம் மேற்கொள்ள முதல்வர் விஜய் தாராபுரம் வந்திருந்தார். அதேசமயம், தாராபுரம், வீராச்சிமங்கலம் பிரிவு பகுதியில் நாம் தமிழர் கட்சியினர் பிரசாரம் மேற்கொள்ள சென்றனர். அதற்கு போலீஸார் அனுமதி மறுத்தனர்.
முதல்வா் விஜய் சாலை வலம் மேற்கொள்ள உள்ளதாகவும் இதனால் அந்தப் பகுதியில் அனுமதி வழங்கப்படாது எனவும் போலீஸார் கூறியிருந்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாதக வேட்பாளர் கார்த்திகா மற்றும் கட்சியினர் போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
எங்கள் பிரசாரத்தை தடுக்கும் விதத்திலேயே போலீஸார் செயல்பட்டு வருவதாகவும் ஒருதலைபட்சமாக போலீஸார் செயல்படுவதாகவும் கூறி, அப்பகுதியில் நாம் தமிழர் கட்சியினர் சாலை மறியலில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் இருதரப்பினரிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
தாராபுரம் நாதக வேட்பாளாரான கார்த்திகா மீது தேர்தல் பிரசாரத்தில் காவல் நிலையத்தை முற்றுகையிட்டது, முதல்வர் சென்ற பாதையில் பிரசாரம் மேற்கொண்டது, முதல்வர் குறித்த அவதூறாகப் பேசியது என 3 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்தது.
இந்த வழக்குகளின் தொடர்ச்சியாக, கோவையில் இருந்த கார்த்திகாவைக் கைது செய்வதற்காகத் தாராபுரம் காவல்துறையினர் சென்றுள்ளனர். அப்போது கார்த்திகாவையும் அவரது கணவரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட இருவரையும் தாராபுரத்திற்கு அழைத்துச் சென்றுள்ளதாகக் கூறப்படுகிறது.

