நாம் தமிழர் கட்சி மனு: இன்று விசாரணை

 
tn

.மத்திய பாஜக அரசின் பதவிக்காலம் வருகிற மே மாதத்துடன் நிறைவு பெறுகிறது. இதனையடுத்து அடுத்த தேர்தலை நடத்துவதற்கான பணிகளில் தேர்தல் ஆணையம் ஈடுபட்டு வருகிறது. அங்கிகரிக்கப்பட்ட தேர்தல் கட்சிகளுக்கு அந்த கட்சிகளின் சின்னங்கள் ஒதுக்கப்பட்டு வரும் நிலையில், அங்கிகரிக்கப்படாத மாநில கட்சிகளுக்கு சின்னங்கள் ஒதுக்கும் பணிகளை தேர்தல் ஆணையம் செய்து வருகிறது. இந்த நிலையில், கடந்த தேர்தல்களில் நாம் தமிழர் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட கரும்பு விவசாயி சின்னம் இந்த முறை பாரதிய பிரஜா ஐக்யதா கட்சிக்கு வழங்கப்பட்டது.

tn

கரும்பு விவசாயி சின்னத்தை நாம் தமிழர் கட்சிக்கு ஒதுக்கீடு செய்யக் கோரி கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தாக்கல் செய்த மனுவைத் தள்ளுபடி செய்தது டெல்லி உயர்நீதிமன்றம். இந்திய தேர்தல் ஆணையம் உரிய விதிமுறைகளின் படியே சின்னத்தை ஒதுக்கீடு செய்துள்ளதால் மனுதாரர் கூறும் படி சின்னம் ஒதுக்குவதில் எவ்வித முறைகேடும் நடைபெறவில்லை என்பதை | நீதிமன்றம் உறுதி செய்ததோடு, மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. 

supreme court

இந்நிலையில் கரும்பு விவசாயி சின்னம் கோரிய நாம் தமிழர் கட்சியின் மேல்முறையீடு மனு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை  நடைபெறுகிறது. தலைமை நீதிபதி டி.ஒய் சந்திரசூட் தலைமையிலான முதன்மை அமர்வில் இன்று விசாரணைக்கு வருகிறது