விஜயலட்சுமி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி நாம் தமிழர் கட்சியினர் புகார்

 
சீமான் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி நடிகை விஜயலட்சுமி போராட்டம்!

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது தொடர்ந்து அவதூறு பரப்பி வரும் நடிகை விஜயலட்சுமி மற்றும் தமிழர் முன்னேற்ற படை அமைப்பின் தலைவர் வீரலட்சுமி ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி நாம் தமிழர் கட்சியின் மகளிர் பாசறை சார்பில் கள்ளக்குறிச்சி எஸ்.பி. அலுவலகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டது. 

Kallakkurichi, Kallakurichi : கள்ளக்குறிச்சி: மாவட்டத்தில் 7 உதவி காவல்  ஆய்வாளர்களை பணியிடை மாற்றம் செய்து மாவட்ட எஸ்.பி மோகன்ராஜ் உத்தரவு | Public  App

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடிகை விஜயலட்சுமி மற்றும் தமிழர் முன்னேற்ற படை அமைப்பின் தலைவர்   வீரலட்சுமி ஆகியோர் தொடர்ந்து அவதூறுகளை பரப்பி வருகின்றார். இந்த நிலையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது தொடர்ந்து அவதூறுகளை பரப்பி, அவரது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டு வரும் நடிகை விஜயலட்சுமி மற்றும் தமிழர் முன்னேற்ற படை அமைப்பின் தலைவர் வீரலட்சுமி ஆகியோர் மீதும் நடவடிக்கை எடுக்கக்கோரி  நாம் தமிழர் கட்சியின் மகளிர் பாசறை சார்பில் மாநில மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர் ரஜியாமாபாபு தலைமையில் நாம் தமிழர் கட்சியை நிர்வாகிகள் கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர். இந்த நிகழ்வின்போது நாம் தமிழர் கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.