பிறந்தநாளையொட்டி விஜய்யை சந்தித்து வாழ்த்து பெற்ற என். ஆனந்த்!

 
ச் ச்

தவெக பொதுச் செயலாளர் N.ஆனந்த் தனது பிறந்த நாளை முன்னிட்டு தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜயை அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

தமிழக வெற்றி கழகத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்துக்கு இன்று பிறந்தநாள். புதுச்சேரியை சேர்ந்த புஸ்ஸி ஆனந்த், பிறந்த நாளை கொண்டாட நேற்று இரவு புதுவை வந்திருந்தார். இன்று காலை அவர் புதுவை சின்னசுப்புராயப்பிள்ளை வீதியில் உள்ள அங்காளம்மன் கோயிலில் தனது குடும்பத்தினருடன் சாமி கும்பிட்டார். தவெக தலைவர் நடிகர் விஜய் போன் மூலம் புஸ்சி ஆனந்த்துக்கு வாழ்த்து தெரிவித்தார்.

Image

பின்னர் புஸ்ஸி ஆனந்த் வீட்டுக்கு புதுவை முதல்வர் ரங்கசாமி நேரில் சென்று, புஸ்சி ஆனந்த் நெற்றியில் திருநீறு பூசி ஆசிர்வதித்து வாழ்த்து தெரிவித்தார். இதேபோல் புதுவை அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், அரசியல் கட்சித் தலைவர்களும் புஸ்ஸி ஆனந்துக்கு வாழ்த்து தெரிவித்தனர். புஸ்சி ஆனந்த்துக்கு வாழ்த்து தெரிவிக்க தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், பிற மாநிலங்களில் இருந்தும் தவெக நிர்வாகிகள், தொண்டர்கள் புதுச்சேரிக்கு வந்திருந்தனர். இந்நிலையில், மாலை மீண்டும் சென்னை திரும்பிய தவெக பொதுச் செயலாளர் N.ஆனந்த் தனது பிறந்த நாளை முன்னிட்டு தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜயை அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.