நடுக்கடலில் மரண பயம்: சொகுசு கப்பலில் பரவிய மர்ம வைரஸ்! சிக்கிய 2 இந்தியர்கள்..!!

 
Q

நெதர்லாந்தைச் சேர்ந்த, 'ஓஷன்வைட் எக்ஸ்பெடிஷன்ஸ்' என்ற நிறுவனத்துக்கு சொந்தமான, 'எம்.வி., ஹோண்டியஸ்' என்ற ஆடம்பர சொகுசு டச்சு கப்பல், ஏப்., 1ல் அர்ஜென்டினாவின் உஷுவாயாவில் இருந்து பயணத்தை தொடங்கியது. இது, ஸ்பெயினின் கேனரி தீவை நாளை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சமீபத்தில் அந்த கப்பலில் இருந்த பல பயணியருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது. பரிசோதனையில், அது எலிகள் மூலம் பரவக்கூடிய ஹண்டா வைரஸ் என்பது கண்டறியப் பட்டது. இதுவரை ஐந்து பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில், நெதர்லாந்தைச் சேர்ந்த ஒரு ஆண் மற்றும் ஜெர்மனியைச் சேர்ந்த பெண் ஒருவர் என, இருவர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், இந்த கப்பல் குழுவில் பணியாற்றி வரும் இரு இந்தியர்களுக்கு தொற்று அபாயம் இருப்பதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. அவர்களை சுகாதாரத் துறையினர் தீவிர கண்காணிப்பில் வைத்துள்ளனர்.

கப்பலில் இருந்த 40 பயணியர், தெற்கு அட்லாண்டிக் பெருங்கடலில் உள்ள தனிமைப்படுத்தப்பட்ட செயின்ட் ஹெலினா தீவில் இறக்கி விடப்பட்டனர். ஐரோப்பா மற்றும் ஆப்ரிக்க நாடுகளைச் சேர்ந்த அவர்களை, அந்தந்த நாட்டு அதிகாரிகள் பத்திரமாக மீட்டு சிகிச்சைக்கு அழைத்து சென்றனர்.