மயிலாப்பூர் சாய்பாபா கோயில் கோபுரத்தின் மீது ராக்கெட் விழுந்ததால் பயங்கர தீவிபத்து

 
Fire

சென்னை மயிலாப்பூரில் உள்ள சாய்பாபா கோயிலில் கட்டப்பட்டு வரும் கோபுரத்தின் மீது ராக்கெட் பட்டாசு பட்டதால் தீப்பற்றி எரிந்தது. 

சென்னை மயிலாப்பூரின் வெங்கடேச அக்ரஹாரம் தெருவில் உள்ள சாய்பாபா கோவிலில் கட்டப்பட்டு வரும் கோபுரத்தின் மீது, ராக்கெட் பட்டாசு மோதியதில் தீப்பற்றி எரிந்தது. பக்கத்தில் விடப்பட்ட ராக்கெட் பட்டாசு கோபுர கலசத்தை சுற்றி உள்ள ஓலைகளில் பட்டதால், உடனடியாக தீப்பற்றியுள்ளது. தகவலறிந்து நிகழ்விடத்துக்கு சென்ற தீயணைப்புத்துறையினர் அரை மணிநேரம் போராடி தீயை அணைத்தனர். நல்வாய்ப்பாக  தீ விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

சென்னை மயிலாப்பூர் சாய்பாபா கோவிலில் கட்டுமானப் பணிகள் நடந்துவருகிறது. அதனால் கோபுரத்தை சுற்றி ஓலைகள் மறைக்கப்பட்டுள்ளன. இந்த ஓலையில் தீபாவளிக்கு வைத்த ராக்கெட் பட்டாசு பறந்து வந்து விழுந்ததில் தீப்பொறி பற்றி தீ விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரிவிக்கப்படுகிறது.