'அன்புமணி பெயருக்கு பின்னால் என் பெயர் வரக்கூடாது..' வேண்டுமென்றால்..!! - ராமதாஸ்..

 
ramadoss ramadoss

எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலில் பாமக யாருடன் கூட்டணி வைக்கும் என செய்தியாளர்கள் பாமக தலைவர் மருத்துவர் ராமதாஸிடம் கேட்டதற்கு போகப் போக தெரியும் என்று தெரிவித்தார்.

பாட்டாளி மக்கள் கட்சியின் தஞ்சாவூர் மற்றும் திருவாரூர் மாவட்ட பொதுக்குழு கூட்டம் இன்று கும்பகோணம் நடைபெற்றது இதில் மருத்துவர் ராமதாஸ் கலந்து கொண்டார். இந்த பொதுக்குழு கூட்டத்தில் மத்திய அரசு பருத்திக்கு கூடுதல் விலை நிர்ணயம் செய்ய வேண்டும்,  நெல் கொள்முதல் நிலையங்கள் கூடுதலாக திறக்க வேண்டும்,  கும்பகோணம் தனி மாவட்டமாக  உடனடியாக அறிவிக்கப்பட வேண்டும்” என வலியுறுத்தினார்.  மேலும், வரும்  ஆக. 10ம்  தேதி பூம்புகாரில் பாட்டாளி மக்கள் கட்சியின் மகளிர் மாநாடு நடைபெறுகிறது. இதில் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்தார்.

anbumani

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த மருத்துவர் ராமதாஸ், “ இனி அன்புமணி எனது இனிஷியிலை பயன்படுத்திக் கொள்ளலாம்; ஆனால்  அவரது பெயருக்கு பின்னால்  எனது பெயரை பயன்படுத்த கூடாது ” என மறைமுகமாக எச்சரிக்கும் விதமாக தெரிவித்தார்.   உங்கள் கூட்டத்தில் அன்புமணி புகைப்படம் இடம்பெற்றுள்ளது என செய்தியாளர்கள் கேட்டதற்கு,  “தஞ்சாவூர் மாவட்ட செயலாளர் ம.க. ஸ்டாலினின் பாசம் விடமில்லை ” என்றார். 

தொடர்ந்து  இரண்டாக உள்ள பாமக தலைமை ஒன்றாக இணைந்தால் கண்ணுக்கு நன்றாக இருக்கும் என பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான எச். ராஜா தெரிவித்துள்ளாரே என்கிற கேள்விக்கு பதிலளித்த அவர்,  “அது அவரது ஆசை” என்றார். அந்த ஆசை நிறைவேறுமா? என மீண்டும் கேட்க, “ போகப் போகத் தெரியும்” என சிரித்தபடியே பாட்டு பாடினார். மேலும், எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலில் யாருடன் கூட்டணி வைப்பீர்கள்?  என்கிற கேள்விக்கும், “போகப் போக தெரியும்” என பாடலையே பதிலாக அளித்தார்.