"எனது வீடுகளில் சோதனை நடக்கவில்லை" - அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்

 
senthil balaji

சென்னை மற்றும் கரூரில் உள்ள எனது வீடுகளில் சோதனை நடக்கவில்லை  என்று  அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கமளித்துள்ளார்.

senthil balaji

தமிழக மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சொந்தமான 40-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமானவரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.  செந்தில் பாலாஜி வீடு,  அவரது சகோதரர் வீடு மற்றும் அவர்களுக்கு சொந்தமான தொழில் நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வருமானவரித்துறையினர் அதிரடியாக இன்று காலை முதல் சோதனை நடத்தி  வருவதாக கூறப்பட்ட நிலையில்  செந்தில் பாலாஜிக்கு ஆதரவாக திமுக தொண்டர்கள் குவிந்துள்ளனர்.   கரூரில் ராமகிருஷ்ணாபுரம் பகுதியில் வருமான வரி சோதனை நடைபெறும் இடத்தில் அதிகாரிகளின் கார் கண்ணாடி உடைக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.  கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் வீட்டில் வருமானவரி சோதனையின் போது திமுகவினர் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.  
 

tn

இந்நிலையில் வருமான வரி சோதனை குறித்து அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று செய்தியாளர்களை சந்தித்தபோது சென்னை மற்றும் கரூரில் உள்ள எனது வீடுகளில்  சோதனை நடக்கவில்லை. எனது தம்பி மற்றும் தம்பிக்கு தெரிந்தவர்கள் தொடர்புடைய இடங்களில் மட்டுமே சோதனை நடக்கிறது. இது போன்ற சோதனைகளை நாங்கள் எதிர்கொள்வது புதிதல்ல. எனது சகோதரர் வீட்டின் காம்பவுண்ட் சுவரில் ஏறி அதிகாரிகள் உள்ளே சென்ற வீடியோ எனக்கு வந்துள்ளது, அதை பற்றி விசாரணை மேற்கொள்ளப்படும். எத்தனை நாட்கள் சோதனை நடத்தினாலும் அவர்களுக்கு முழு ஒத்துழைப்புத் தரப்படும். வருமான வரித்துறை சோதனையை நேர்மையாக எதிர்கொள்வேன்;விரும்பத்தகாத நிகழ்வு நடைபெற்றதற்கு வருமான வரித்துறையே காரணம்; சோதனை நிறைவடைந்த பின் செய்தியாளர்களை சந்திப்பேன்; 2006 ஆம் ஆண்டுக்குப் பிறகு எனது பெயரிலோ, எனது குடும்பத்தினர் பெயரிலோ எந்த சொத்தும் வாங்கவில்லை என்று தெரிவித்தார்.