நண்பர் ஸ்டாலின் மீண்டும் போராடுவார்..! - தேர்தல் முடிவுகளுக்குப் பின் கமல் கொடுத்த ரியாக்ஷன்..!

 
1

சமூக வலைதளத்தில் கமல் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: தங்களுடைய முதல் தேர்தலிலேயே மக்களுடைய நம்பிக்கையைப் பெற்று பெருவெற்றி பெற்றிருக்கும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்க்கும், அவரது கட்சியினருக்கும் என்னுடைய பாராட்டுகள்.


மக்கள் பணி சிறக்க என்னுடைய வாழ்த்துகள். ஜனநாயக அரசியலில் தேர்தல் ஓர் அங்கம்தான். அருமை நண்பர், திமுக தலைவர் ஸ்டாலின் வெற்றியில் ஆர்ப்பரிப்பவரும் அல்ல. தோல்வியில் துவள்பவரும் அல்ல. மீண்டும் போராடுவார். மீண்டும் வெல்வார். இவ்வாறு கமல் கூறியுள்ளார்.