"அப்பா கம்யூனிஸ்ட்... மகன் திமுகவா?" தி.மு.க-வில் இணைந்த பாரதி சுப்பராயன்..!
சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், நவீன மனிதர்கள் அமைப்பின் தலைவர் பாரதி சுப்பராயன் தலைமையில் நிர்வாகிகள் பலரும் திமுகவில் இணைந்தனர். அமைப்பின் துணைத் தலைவர் அரவிந்தன், செயலாளர் வி.சுரேஷ், பொருளாளர் ஆர்.பிரகாஷ் சந்திரன், துணை பொருளாளர் எ.செந்தில்குமார், துணைச் செயலாளர்கள் ராஜா, சி.ஜேம்ஸ், தமிழ்செல்வன், சிவசந்திரன் மற்றும் ஒருங்கிணைப்பாளர் அருண்குமார் ஆகியோர் தங்களை அதிகாரப்பூர்வமாகக் கட்சியில் இணைத்துக் கொண்டனர்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், திருப்பூர் எம்.பி-யுமான சுப்பராயன் மகன் பாரதி சுப்பராயன். இவர் தனது நண்பர்களுடன் இணைந்து 'நவீன மனிதர்கள்' என்ற பெயரில் ஒரு அமைப்பை ஏற்படுத்தி இருந்தார். இந்த அமைப்பு சார்பில் 2024 மக்களவை தேர்தலில் திருப்பூரில் போட்டியிட்ட தந்தை சுப்பராயனுக்கு ஆதரவாக பாரதி தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார்.
இந்த நிலையில், பாரதி சுப்பராயன் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தார். அவருடன் நவீன மனிதர்கள் அமைப்பின் துணைத் தலைவர் அரவிந்தன், செயலாளர் வி. சுரேஷ், பொருளாளர் ஆர். பிரகாஷ் சந்திரன், துணை பொருளாளர் எ. செந்தில்குமார், துணைச் செயலாளர்கள் ராஜா, சி. ஜேம்ஸ், தமிழ்செல்வன், சிவசந்திரன், மற்றும் ஒருங்கிணைப்பாளர் அருண்குமார் ஆகியோரும் தி.மு.க.வில் இணைந்துள்ளனர்.

