"என் தொகுதிக்கு இன்னும் எம்.எல்.ஏ. நிதியே வரல!" – பிரேமலதா அதிரடி குற்றச்சாட்டு!

 
premalatha vijayakanth

விருத்தாசலத்தில், தே.மு.தி.க., பொதுச்செயலர் பிரேமலதா அளித்த பேட்டி:

என்னுடைய விருத்தாசலம் தொகுதிக்கு எம்.எல்.ஏ., நிதி இன்னும் வரவில்லை. ஒரு திட்டத்தை அரசு நடைமுறைபடுத்தினால், அது மக்களிடம் எப்படி சேர்கிறது என்பதை கவனிக்க வேண்டும். ஏற்கனவே, போக்குவரத்து மற்றும் மின்சார துறைகள் கடனில் உள்ளன.

ஒவ்வொரு துறையும் கடனில் தான் செல்கிறது. இந்த நிலையில், எல்லாவற்றிற்கும் இலவசம் அறிவிப்பது ஏன் என்று புரியவில்லை. பெண்களுக்கான வெற்றி பயண திட்டத்தில் பல்வேறு குழப்பங்கள் உள்ளன. அரசு பள்ளிகளில் கழிவறை, மேஜை, பெஞ்ச் போன்ற அடிப்படை வசதிகள் இல்லை.

இந்த குறைகளை தீர்க்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். கடலுார் – விருத்தாசலம் சாலையில், டாஸ்மாக் கடைகளால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. அந்த கடைகளை அகற்றுமாறு கோரி, ஐந்து மாதங்களாகியும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. விருத்தாசலத்தை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும்.

இவ்வாறு பிரேமலதா கூறினார்.