‘என் கோட்டும், நோட்டும் 'ஒயிட்'.. ரூ.2 ஆயிரம் நோட்டு தடை குறித்து கவலை இல்லை - தமிழிசை கருத்து

 
‘என் கோட்டும், நோட்டும் 'ஒயிட்'.. ரூ.2 ஆயிரம்  நோட்டு தடை குறித்து கவலை இல்லை -  தமிழிசை கருத்து

ரூ. 2000 தடை குறித்து கவலை இல்லை என புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரியில்  தனியார் கல்லூரி ஆண்டு விழாவில் பங்கேற்ற  ஆளுநர் தமிழிசை, அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “பள்ளி மற்றும் கல்லூரி தேர்வில் தோல்வியுற்ற மாணவர்கள் தற்கொலை செய்து கொள்ளக்கூடாது. தேர்வு என்பது வாழ்க்கையில் ஒரு பகுதிதான். வாழ்க்கை இன்னும் நிறைய இருக்கிறது. தேர்வு எழுதாதவர் பல பேர் வாழ்க்கையில் முன்னுக்கு வந்துள்ளனர். மாணவர்கள் எந்த ஒரு தவறான முடிவு எடுக்க வேண்டாம். தேர்வுக்கு செல்லும் மாணவர்களுக்கு கவுன்சிலிங் வைக்க வேண்டும், தன்னம்பிக்கை வைக்க மாரல் கிளாசஸ் நடத்த வேண்டும், தற்காப்பு கலைக்கான வகுப்புகள் வைக்க வேண்டும். இது குறித்து முதலமைச்சர், கல்வி அமைச்சர் ஆகியோருடன் கலந்து ஆலோசனை செய்து நடவடிக்கை எடுக்கப்படும்.  

‘என் கோட்டும், நோட்டும் 'ஒயிட்'.. ரூ.2 ஆயிரம்  நோட்டு தடை குறித்து கவலை இல்லை -  தமிழிசை கருத்து

ஆளுநருக்கு அதிகாரம் என்பதில் புதுவையில் கவர்னருக்கும், முதலமைச்சருக்கும் எந்த வகையிலாவது கருத்து வேறுபாடு வருமா? என முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி காத்துக்கொண்டிருக்கிறார். எங்களுக்குள் கருத்து வேறுபாடு வராது. டெல்லி நிலை வேறு, புதுவை நிலை வேறு, மற்ற யூனியன் பிரதேசங்களுக்கான நிலை வேறு. மக்கள் சார்ந்த விஷயங்கள் புதுவையில் சிறப்பாக நடைபெறுவதுதான் நாராயணசாமிக்கு கவலையாக இருக்கிறது” என தெரிவித்தார். அப்போது  மத்திய அரசின் ரூ.2 ஆயிரம் நோட்டு தடை குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், “இந்த தடை பற்றி எனக்கு கவலை இல்லை. நான் போட்டு இருக்கும் கோட்டும் ஒயிட், நோட்டும் ஒயிட். ரூ.2 ஆயிரம் நோட்டு தடை பற்றி இன்னும் அறியவில்லை. விபரங்களை அறிந்து பதிலளிக்கிறேன்” என்றார்.