எனது 16 காட்சிகளை 'ஜெயிலர் 2'-ல் தூக்கிட்டாங்க.. நடிகை ஓபன் டாக்..!

 
1

ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான 'ஜெயிலர் 2' திரைப்படம் திரையரங்குகளில் சிறப்பான வரவேற்பைப் பெற்று வருகிறது. இதில் மோகன்லால், சிவ ராஜ்குமார் போன்ற நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். சூரஜ் வெஞ்சாரமூடுவின் மனைவியாக நடித்த நடிகை அன்னா ரேஷ்மா ராஜன், தனது கதாபாத்திரம் தொடர்பான சுமார் 16 காட்சிகள் எடிட்டிங்கில் நீக்கப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளார். குறிப்பாக, ஒரு முக்கியமான எதிர்வினை காட்சி நீக்கப்பட்டது குறித்து அவர் வருத்தம் தெரிவித்துள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் - 2 திரைப்படம் தமிழ் மட்டுமல்லாது பான் இந்திய அளவில் பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது. நகைச்சுவை, ஆக்‌ஷன் என எல்லாம் கலந்த கமர்சியல் திரைப்படமாக அமைந்ததால் அனைத்து வயது ரசிகர்களும் ரசித்து வருகின்றனர்.

அதிக டிக்கெட்கள் விற்பனையாகிக் கொண்டிருக்கும் சூழலில், இப்படம் இதுவரை ரூ. 550 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், இதே வேகத்தில் சென்றால் ரூ. 800 கோடிக்கும் அதிகமாக வசூலிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், ஜெயிலர் - 2 திரைப்படத்தில் நடித்த சில நடிகர்களும் கவனம் பெற்று வருகின்றனர். முக்கியமாக, இப்படம் மூலம் நடிகர் நமோ நாராயணா அதிக பாராட்டுகளைப் பெற்றுள்ளார். தற்போது, நடிகர் சுராஜ் வெஞ்சரமூடுக்கு ஜோடியாக நடித்த அன்னா ராஜனும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். சில காட்சிகளிலேயே இவர் வந்தாலும் தோற்றத்தில் கவனம் ஈர்த்த அன்னா ராஜன் மலையாள நடிகை ஆவார்.

அங்கமாலி டைரிஸ் திரைப்படம் மூலம் சினிமாவுக்கு அறிமுகமான அன்னா ராஜன் வெளிப்பாடிண்டே புஸ்தகம், அய்யப்பனும் கோஷியும் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர். இறுதியாக, தாவீது திரைப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார். ஆனால், நடிகையாக நல்ல வாய்ப்புகள் அமையாமல் இருந்தார். தற்போது, ஜெயிலர் - 2 திரைப்படம் ரசிகர்களிடம் அவரைக் கொண்டு சேர்த்திருக்கிறது.