பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் புகழ் போற்றி வணங்குகிறோம் - அண்ணாமலை

தென்னகத்தின் போஸ் தெய்வதிருமகனார் ஐயா பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்கள் புகழ் போற்றி வணங்குகிறோம் என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, தேசியத்தையும் தெய்வீகத்தையும் தமது இரு கண்களாகக் கருதிய மாமனிதர் தெய்வதிருமகனார் ஐயா பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களது குருபூஜையை முன்னிட்டு, மதுரை கோரிப்பாளையத்தில் அமைந்துள்ள அவரது உருவச் சிலைக்கு, மாண்புமிகு கோவா மாநில முதலமைச்சர் திரு @DrPramodPSawant அவர்கள் மற்றும் @BJP4Tamilnadu மாநில மாவட்ட நிர்வாகிகளுடன் மாலை அணிவித்து, மரியாதை செலுத்தி வணங்கினோம்.
தேசியத்தையும் தெய்வீகத்தையும் தமது இரு கண்களாகக் கருதிய மாமனிதர் தெய்வதிருமகனார் ஐயா பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களது குருபூஜையை முன்னிட்டு, மதுரை கோரிப்பாளையத்தில் அமைந்துள்ள அவரது உருவச் சிலைக்கு, மாண்புமிகு கோவா மாநில முதலமைச்சர் திரு @DrPramodPSawant அவர்கள் மற்றும்… pic.twitter.com/jdCZsJ19QE
— K.Annamalai (@annamalai_k) October 30, 2023
தேச விடுதலைக்காகவும், சமூக விடுதலைக்காகவும் போராடிய வீரர் ஐயா பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்கள். ஏழை எளிய மக்களுக்காக தமது சொத்துக்களை அனைத்தும் வழங்கிய வள்ளல். அனைத்து சமுதாய மக்களும் ஆலயத்துக்குள் செல்ல, ஆலய நுழைவுப் போராட்டத்தை முன்னெடுத்தவர். தென்னகத்தின் போஸ் தெய்வதிருமகனார் ஐயா பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்கள் புகழ் போற்றி வணங்குகிறோம் என்று குறிப்பிட்டுள்ளார்.