உலகிலேயே உயரமான முத்துமலை முருகன் சிலைக்கு இன்று குடமுழுக்கு!!
உலகிலேயே உயரமான முத்துமலை முருகன் சிலைக்கு இன்று குடமுழுக்கு விழா நடைபெறுகிறது.

சேலம் புத்திர கவுண்டம்பாளையம் பகுதியில் உலகிலேயே உயரமான முத்துமலை முருகன் சிலை அமைக்கப்பட்டுள்ளது. 146 அடி கொண்ட முருகன் சிலைக்கு இன்று குடமுழுக்கு நடைபெறுகிறது. முத்துமலை முருகன் சிலை மூன்று ஆண்டுகளாக திருப்பணி நடைபெற்று வந்த நிலையில் இதன் பணிகள் முழுவதும் நிறைவடைந்தது இன்று குடமுழுக்கு நடைபெறுகிறது.146 அடி கொண்ட முருகன் சிலைக்கு ஹெலிகாப்டர் மூலமாக மலர் தூவ கோவில் நிர்வாகம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மலேசிய பத்துமலை முருகன் சிலையை விட 6 அடி உயரமாக 146 அடி உயரத்தில் முத்துமலை முருகன் உருவ சிலை அமைக்கப்பட்டுள்ளது. மலேசிய நாட்டின் அமைந்துள்ள பத்துமலை முருகன் சிலையை 140 அடியில் வடிவமைத்த திருவாரூர் தியாகராஜன் ஸ்தபதி குழுவினர் தற்போது முத்துமலை முருகன் சிலையை 146 அடிக்கு சாதனை படைத்துள்ளனர்.


