“நானும் வஹிதாவும் நல்ல நண்பர்கள்”- முத்துக்குமரன் விளக்கம்

 
ச்

நானும் வஹிதாவும் நல்ல நண்பர்கள். அவர் ஏன் இப்படி செய்தார் என்று எனக்கு சத்தியமாக புரியவில்லை என பிக்பாஸ் பிரபலம் முத்துக்குமரன் விளக்கம் அளித்துள்ளார்.


பட்டிமன்ற பேச்சாளரான முத்துக்குமரன் யூடியூபராகவும் இருந்து வருகிறார். ‘தமிழ் பேச்சு எங்கள் மூச்சு’ நிகழ்ச்சியின் மூலம் கவனம் பெற்ற இவர், பிக்பாஸ் சீசன் 8-ல் தனது பேச்சுத் திறமையால் இறுதிவரை முன்னேறி டைட்டில் வென்றார். இவருக்கு இன்ஸ்டாகிராமில் 1.4 மில்லியன் ஃபாலோயர்கள் உள்ளனர். இந்நிலையில், பிக்பாஸ் வின்னர் முத்துக்குமரன் மீது இன்ஸ்டா பிரபலம் வஹிதா  பாலியல் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். என்னுடன் உறவு வைத்து கொண்டு பிக் பாஸ் முத்துக்குமரன் என்னை ஏமாத்திட்டாரு என அவர் தற்கொலை முயற்சி செய்ததாக கூறப்படுகிறது.

இந்த குற்றச்சாட்டுக்கு விளக்கம் அளித்துள்ள முத்துக்குமரன், “நானும் வஹிதாவும் நல்ல நண்பர்கள். அவர் ஏன் இப்படி செய்தார் என்று எனக்கு சத்தியமாக புரியவில்லை. அது குறித்துதான் கிளாரிட்டிக் கேட்டுக்கொண்டிருக்கிறேன். அவர் கொஞ்சம் Disturbed-ஆக இருந்தார்” எனக் கூறியுள்ளார்.