தோழர்.என்.சங்கரய்யா விரைவில் குணமடைய முத்தரசன் வாழ்த்து

 
mutharasan

தோழர்.என்.சங்கரய்யா விரைவில் குணமடைய முத்தரசன்  வாழ்த்து தெரிவித்துள்ளார்.

tn

இதுதொடர்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் , கம்யூனிஸ்ட் பேரியக்கத்தின் மூத்த தலைவரும், விடுதலைப் போராட்ட வீரமும் தமிழ்நாடு அரசின் தகைசால் தமிழர் விருது பெற்றவருமான மதிப்பிற்குரியதோழர்.என்.சங்கரய்யா அவர்கள், உடல்நலக் குறைவால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

mutharasan

102 வயதான போதும், நல்ல நினைவாற்றல், கம்பீர குரல் இருப்பது மட்டுமல்ல, எந்நாளும் மக்கள் நலன் குறித்தே கவலைப்படும் மதிப்புமிக்க தலைவராவார். பொது வாழ்வில் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதற்கான முன்னுதாரணமாக விளங்கும் தோழர்.என்.சங்கரய்யா விரைவில் பரிபூரண குணமடைந்திட வேண்டுமென இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி தமிழ்நாடு மாநிலக்குழு சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம். என்று குறிப்பிட்டுள்ளார்.