“கூட்டணிக்கு அழைத்த ஈபிஎஸ்.. 2025-ன் சிறந்த நகைச்சுவை”- முத்தரசன்

 
ச் ச்

ஈபிஎஸ் சேர்ந்திருக்கும் பாஜக, ரத்தினக் கம்பளம் அல்ல. ரத்தம் படிந்த கம்பளம் என சிபிஐ மாநிலச் செயலாளர் முத்தரசன் பதிலடி கொடுத்துள்ளார்.

முத்தரசன்

சிதம்பரத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட எடப்பாடி பழனிசாமி, “விசிக மாநாட்டுக்கும், கம்யூனிஸ்ட் கட்சிகளின் கொடி கம்பம் நடவும் அனுமதி தர மறுக்கிறார்கள். இவ்வளவு அசிங்கபட்டு திமுக கூட்டணியில் விசிகவும், கம்யூனிஸ்ட் கட்சிகளும் இருக்க வேண்டுமா? அதிமுக கூட்டணிக்கு வரும் கட்சிகளை ரத்தினக் கம்பளம் விரித்து வரவேற்போம்” எனக் கூறினார்.

எடப்பாடி பழனிசாமியின் அழைப்பு குறித்து கருத்து கூறியுள்ள சிபிஐ மாநிலச் செயலாளர் முத்தரசன், “எடப்பாடி பழனிசாமி, கோவையில் பேசும்போது கம்யூனிஸ்டுகளே இல்லை என்றார், இந்த வாரம் சிதம்பரத்தில் கம்யூனிஸ்டுகளை தங்கள் கூட்டணிக்கு அழைப்பு விடுக்கிறார். அவர் மேற்கொள்வது பரப்புரை அல்ல நகைச்சுவை. 2025ன் சிறந்த நகைச்சுவை எடப்பாடி பழனிசாமி சொல்லிய இந்த நகைச்சுவைதான். ஈபிஎஸ் சேர்ந்திருக்கும் பாஜக, ரத்தினக் கம்பளம் அல்ல. ரத்தம் படிந்த கம்பளம். தேசிய கல்விக் கொள்கையை அதிமுக ஆதரிக்கிறதா? எதிர்க்கிறதா? என்ற கேள்விக்கு எடப்பாடி பழனிசாமி நேரடி பதில் தர வேண்டும்” என்றார்.