“ஆளுநர் ரவி வாலை அதிகம் ஆட்டுகிறார்; ஆளுநர் மாளிகை பாஜக அலுவலகமாகிவிட்டது”

 
rn ravi

ஆளுநர் ரவி வாலை அதிகம்  ஆட்கிறார், ஆளுநர் மாளிகை பாஜக அலுவலகமாக மாறிவிட்டது, அவர் தமிழக அரசுக்கு எதிராக போட்டி அரசியல் செய்வது கண்டிக்கத்தக்கது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.  புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய மாநாடு மற்றும் நிதியளிப்பு கூட்டம் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் பங்கேற்று பேசினார்.

Mutharasan : பாஜகவின் பகீர முயற்சிக்கு அதிமுக பலியாகியுள்ளது -  இரா.முத்தரசன் | CPI Mutharasan says ADMK has fallen victim to BJP misguided  attempt – News18 Tamil

அதற்கு முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய முத்தரசன், “,மத்தியில் ஆளும் மோடி அரசு மக்கள் நலனை பாதிக்கும் பல்வேறு செயல்களை தொடர்ந்து செய்து வருகிறது,அதன் ஒரு பகுதியாக மே தின பரிசாக  வர்த்தக சிலிண்டர் விலையை ரூ. 102.50  காசாக உயர்த்தி மிக கடுமான பாதிப்பிற்கு மக்களை ஒன்றிய அரசு தள்ளியுள்ளது, இது போன்ற விலைவாசி உயர்வை கண்டித்து தான் இலங்கையில் பிரச்சனை நடைபெற்று வருகிறது, இலங்கை போன்ற ஒரு பிரச்சனை இந்தியாவில் ஏற்பட்டாலும் ஆச்சரியபட வேண்டியதில்லை, அங்கு போராட்டம் நடத்துவதற்கான அனைத்து சாத்தியக் கூறுகளும் இங்கும் உள்ளது, அங்கு ராஜபக்ஜே குடும்பத்திற்கு எதிராக போராடம் நடக்கிறது, இங்கு மோடி அரசுக்கு எதிராக போராட்டம் நடத்த மக்கள் ஆயத்தம் ஆகி வருகின்றனர், அந்த அளவிற்கு இந்தியாவில் விலைவாசி உயர்ந்துள்ளது,

மத்திய அரசின் இந்த மக்கள் விரோத போக்கை கண்டித்து வருகின்ற ஆகஸ்ட் மாதம் 30ஆம் தேதி திருப்பூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மோடி அரசே வெளியேறு என்ற முழக்கத்தோடு பேரணி மற்றும் மாநாடு நடைபெற உள்ளது. நிலக்கரி பற்ற்றாக்குறையால் முழு மின் உற்பத்தியை செய்ய முடியாத சூழல் தமிழகத்தில் ஏற்பட்டுள்ளது, ஒன்றிய அரசு மாநில அரசுகளுக்கு நிலக்கரியை வழங்காமல் அலட்சியம் காட்டுகின்றனர், தமிழகத்திற்கு தேவையான நிலக்கரியை பாரபட்சம் காட்டாமல் ஒன்றிய அரசு உடனடியாக வழங்க வேண்டும், தமிழக அரசுக்கு நெருக்கடி கொடுக்கிறது, மின்தடை ஏற்பட்டால் தமிழக அரசைத்தான் மக்கள் குற்றம் சாட்டுவார்கள், அதைத்தான் பாஜக அரசு விரும்புகிறது, இது நல்ல அனுகுமுறை அல்ல, தமிழகத்தின் மின் தேவையை கருத்தில் கொண்டு நிலக்கரியை தங்கு தடையின்றி தமிழத்திற்கு வழங்க வேண்டும். இலங்கைக்கு பாஜக தலைவர் அண்ணாமலை ஏன் சென்றார்? அவர் ஒன்றிய அரசு பிரதிநிதியாக சென்றாரா மாநில அரசின் பிரதிநிதியாக சென்றாரா? அங்கு பார்வையிட்டு ஆய்வு செய்வதற்கு அவர் யார்? இலங்கை பிரச்சனையில் அதிகாரப்பூர்வமாக ஆய்வு மேற்கொள்ள அவருக்கு அதிகாரம் இல்லை, அவராக வேண்டுமானால் எதை வேண்டுமானாலும் சொல்லிக்கொள்ளலாம்.

தமிழகத்தில் ஆளுநர் ரவி ரொம்ப வாலை ஆட்டுகிறார், தமிழக அரசுக்கு எதிராக போட்டி அரசியல் செய்கிறார், ஆளுநர் அலுவலகம் பாஜக அலுவலகமாக மாறிவிட்டது,பாஜகவில் மேலிட பிரதிநிதியாக ரவி செயல்படுகிறார், ஆளுநர் பதவியை பயன்படுத்தி அரசியல் ஆதாயம் தேடும் அற்ப நபராக அவர் மாறிவிட்டார், 2031 இல் மட்டுமல்ல 3031 கூட தமிழகத்தில் பாஜக ஆட்சிக்கு வர முடியாது” எனக் கூறினார்.