சாலையில் ஆறாகப் பாய்ந்த கடுகு எண்ணெய்... விபத்தில் சிக்கியவரைப் பார்க்காமல் வாளிகளோடு படையெடுத்தக் கூட்டம்!
கான்பூர் நெடுஞ்சாலையில் லாரி மோதி கடுகு எண்ணெய் டேங்கர் உடைந்ததால், ஆயிரக்கணக்கான லிட்டர் எண்ணெய் சாலையில் ஆறாகப் பாய்ந்து ஓடியது.
கான்பூர் தேசிய நெடுஞ்சாலையில் வேகமாக வந்த லாரி ஒன்று, முன்னாள் சென்ற கடுகு எண்ணெய் ஏற்றி வந்த டேங்கர் லாரி மீது பயங்கரமாக மோதியதில் அப்பகுதியில் பெரும் பரபரப்பும் குழப்பமும் ஏற்பட்டது. அதிவேகமாக வந்த வாகனம் பின்னால் இருந்து பலமாக மோதியதால் இந்த விபத்து நேரிட்டது.
மோதிய வேகத்தில் டேங்கர் லாரியின் ஒரு பகுதி உடைந்து சேதமடைந்தது. இதனால் டேங்கருக்குள் இருந்த ஆயிரக்கணக்கான லிட்டர் கடுகு எண்ணெய் ஆறாகப் பெருகி, சாலையில் தொடர்ச்சியாகக் கொட்டி வழிந்தோடத் தொடங்கியது.
எண்ணெய் கொட்டுவதைப் பார்த்த அப்பகுதி மக்களும், வழியே சென்ற பயணிகளும் இந்த விஷயத்தை அறிந்தவுடன் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்தனர். கையில் கிடைத்த வாளிகள், பாத்திரங்கள் மற்றும் கேன்களுடன் வந்த பொதுமக்கள், சாலையில் பெருக்கெடுத்து ஓடிய எண்ணெய்யை போட்டி போட்டுக் கொண்டு அள்ளிச் செல்லத் தொடங்கினர்.
சிலர் போட்டி போட்டுக்கொண்டு எண்ணெய்யை பாத்திரங்களில் நிரப்பிக் கொண்டிருக்க, மற்ற சிலரோ வேடிக்கைப் பார்த்தபடியே இந்தச் சம்பவத்தை தங்கள் கைபேசிகளில் வீடியோவாகப் பதிவு செய்தனர். இந்த ஆபத்தான சூழலிலும் பொதுமக்கள் எண்ணெயை அள்ள போட்டி போட்டனர், சிலர் உதவ முன்வராமல் வீடியோ எடுத்து வேடிக்கை பார்த்தனர்.
कानपुर हाईवे पर उस वक्त अफरा-तफरी मच गई जब सरसों के तेल से भरे टैंकर में पीछे से आ रहे तेज रफ्तार ट्रक ने जोरदार टक्कर मार दी। टक्कर इतनी भीषण थी कि टैंकर का कोना फट गया और हजारों लीटर तेल सड़क पर धार बनकर बहने लगा। तेल बहता देख जिसे पता चला, वही बाल्टी-डिब्बा लेकर मौके पर पहुंच गया। कोई तेल समेटने लगा तो कोई तमाशबीन बनकर वीडियो बनाने लगा। लोग कहने लगे 'दाने-दाने पर लिखा होता है खाने वाले का नाम'।
— Sachin Verma (@itSachinverma) October 5, 2026