விஜயிடம் இருந்து இஸ்லாமியர்கள் தள்ளி இருக்க வேண்டும்- அகில இந்திய முஸ்லிம் ஜமாத்

 
ச்

தவெக தலைவர் விஜயிடம் இருந்து தமிழ்நாடு இஸ்லாமியர்கள் தள்ளியிருக்க வேண்டும் என அகில இந்திய முஸ்லீம் ஜமாத்  சகாபுதீன் ராஜ்வி கூறியுள்ளார்.

உலகமெங்கும் வாழும் இஸ்லாமிய உறவுகள் அனைவருக்கும் எனது உளமார்ந்த ரமலான்  திருநாள் வாழ்த்துக்கள்! 🕋🫂❤️ #EidMubarak to all ☪️ #thalapathyvijay  #TVKVijay

 

இதுதொடர்பாக அகில இந்திய முஸ்லீம் ஜமாத்  சகாபுதீன் ராஜ்வி வெளியிட்டுள்ள வீடியோவில், “சென்னையில் நடந்த இப்தார் விருந்தை விஜய் கொச்சைப்படுத்தி பாவம் செய்துவிட்டார். குடிகாரர்கள், சூதாட்டக்காரர்களை இப்தார் விருந்துக்கு விஜய் அழைத்து வந்துள்ளார். தமிழ்நாட்டு இஸ்லாமியர்கள் விஜயை எந்த நிகழ்ச்சிக்கும் அழைக்க வேண்டாம். இஸ்லாம் மற்றும் இஸ்லாமியர்களுக்கு எதிராக விஜயின் செயல்பாடுகள் இருக்கின்றனர். ஆகவே அவரிடமிருந்து இஸ்லாமியர்கள் தள்ளியிருக்க வேண்டும். விஜய் முஸ்லிம் விரோத, அவரது பின்னணி மற்றும் கடந்த கால நடவடிக்கைகள் இஸ்லாத்திற்கு எதிரான பல நிகழ்வுகளை பிரதிபலிக்கின்றன.


திரைப்படத் துறையில் தொழிலுக்கு பின்னர் அரசியலில் தன்னை நிலைநிறுத்திக் கொள்ள விஜய் முஸ்லிம் உணர்வுகளைப் பயன்படுத்திக் கொள்கிறார். விஜய்யின் பீஸ்ட் திரைப்படத்தில், முஸ்லிம்களையும் முழு முஸ்லிம் சமூகத்தையும் பயங்கரவாதம் மற்றும் தீவிரவாதத்துடன் தொடர்புடையவர்களாக சித்தரித்து, அவர்களை “அரக்கர்கள்” மற்றும் “பேய்கள்” என்று சித்தரித்தார். அரசியலில் நுழைந்து வாக்குகளைப் பெற முஸ்லிம்களை திருப்திப்படுத்தும் நடவடிக்கைகளில் விஜய் ஈடுபடுகிறார்” எனக் குறிப்பிட்டுள்ளார்.