தஞ்சை பெரியக்கோவிலுக்குள் அமர்ந்து சிக்கன் பிரியாணி சாப்பிட்ட இஸ்லாமியர்! வைரல் வீடியோ

 
முஸ்லீம்

தஞ்சை பெரியக்கோயிலுக்குள் அமர்ந்து இஸ்லாமிய குடும்பத்தினர் அசைவ உணவு சாப்பிடும் காணொலி இணையத்தில் வைரலாகிவருகிறது. 

உலக புகழ் பெற்ற தஞ்சாவூர் பெரிய கோயிலில் ஆண்டு தோறும் சித்திரை பெருவிழா வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தாண்டு சித்திரை பெருவிழாவின் கொடியேற்றம் வருகிற 17-ஆம் தேதி நடைபெறவுள்ளது. விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் மே ஒன்றாம் தேதி நடைபெறுகிறது. இந்நிலையில் சித்திரை பெருவிழாவிற்கான பந்தக்கால் நடும் விழா கடந்த மூன்றாம் தேதி தஞ்சை பெரிய கோயில் வளாகத்தில் நடைபெற்றது.

சித்திரை பெருவிழாவுக்கான ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடைபெற்றுவரும் நிலையில், தஞ்சை பெரியகோயில் மாற்று மதத்தை சேர்ந்தவர்கள் கோவில் கோபுர வளாகத்திற்குள் மாமிச உணவுகளை உண்ணும் காட்சிகள் இணையத்தில் வைரலாகிவருகிறது. ஆனால் இதனை அறநிலையத்துறை அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை எனக் குற்றஞ்சாட்டு எழுந்துள்ளது. பக்தர்கள் அளித்த புகாரின் பேரில்கோயிலுக்குள் அமர்ந்து அசைவ உணவு சாப்பிட்ட இஸ்லாமிய குடும்பத்தினர்  காவல்துறை உதவியுடன் வெளியேற்றபட்டனர்.


சாதி, மத, பேதமின்றி உலகம் முழுவதுமின்றி ஏராளமான சுற்றுலா பயணிகள் வரும் தஞ்சை பெரியக்கோயிலுக்குள், இதுபோன்ற விரும்பதாகத செயல்கள் திமுக ஆட்சியிலேயே நடைபெறுவதாக கூறி அசோக் என்ற வழக்கறிஞர் டிவிட்டரில் வீடியோ பதிவிட்டுள்ளார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது.