"விஜய் கட்சிக்கு பாடல் கேட்டால் கண்டிப்பாக செய்வேன்"- யுவன் சங்கர் ராஜா

 
விஜய்

 விஜய் கட்சிக்கு பாடல் கேட்டால் கண்டிப்பாக செய்வேன் என இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தெரிவித்துள்ளார்.

Image

கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா, “செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக இன்னும் 10 ஆண்டுகளில் இசையமைப்பாளர்களுக்கே வேலை இருக்காது. மனிதர்களால் ஏற்படுத்தக்கூடிய உணர்வை செயற்கை நுண்ணறிவால்  உருவாக்க முடியாது என ஏ.ஆர். ரகுமான் கூறியதும் உண்மைதான். நடிகர் விஜயின் புதிய கட்சிக்கு All The Best. விஜய்யின் தவெக கட்சிக்கு பாடல் கேட்டால் கண்டிப்பாக செய்வேன். கோவை கொடிசியாவில் அக்டோபர் 12ல் யுவன் சங்கர் ராஜா இசை நிகழ்ச்சி நடக்கிறது. இதில் ரசிகர்களின் விருப்ப பாடல்களும், புதிய முயற்சிகளும் இடம்பெறும்” என்றார்.

கொடிசியா மைதானத்தில் வரும் அக். 12ம் தேதி இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசை நிகழ்ச்சி நடைபெற உள்ளது. கோவையில் முதல் முறையாக 360 டிகிரியில் யுவன் இசை நிகழ்ச்சி நடைபெறவுள்ளது குறிப்பிடதக்கது.