ராமர் கோவில் நிகழ்வு பிரதமர் மோடிக்கு அழியா புகழைத் தேடி தரும்- இளையராஜா

 
ராமர் கோவில் நிகழ்வு பிரதமர் மோடிக்கு அழியா புகழைத் தேடி தரும்- இளையராஜா

அயோத்தி ராமர் கோயில் இந்தியா முழுவதற்குமான கோயிலாகத் திகழும் என இசையமைப்பாளர் இளையராஜா புகழாரம் சூட்டியுள்ளார்.

'முன்னர் மன்னர்கள் தான் கோயில் கட்டினார்கள் தற்போது பிரதமர் கட்டியுள்ளார்' - இளையராஜா புகழாரம்


அயோத்தி ராமர் கோயில் விழாவையொட்டி சென்னை நாரத கான சபாவில் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் கலந்துகொண்டு பேசிய இசையமைப்பாளர் இளையராஜா, “இந்தியாவில் எத்தனை பிரதமர்கள் வந்திருந்தாலும், ராமர் கோயில் கட்டிய வரலாறு மோடிக்குதான் கிடைத்துள்ளது. இந்தியாவில் எத்தனையோ பிரதமர்கள் வந்து போனார்கள். என்னென்ன செய்தார்கள் என பாருங்கள்.... இதுவரை மன்னர்கள் கோயில் கட்டிய நிலையில், இன்று ஒரு பிரதமர் மோடி கட்டியுள்ளார். ராமர் கோயில் பற்றி பேசும் போதே கண்ணீர் வருகிறது. அயோத்தியில் இன்று நான் இல்லாதது மிகுந்த வருத்தம் அளிக்கிறது. 

அயோத்தி ராமர் கோயில் இந்தியா முழுவதற்குமான கோயிலாகத் திகழும் . ராமர் பிறந்த இடத்தில் அவருக்காக பிரதமர் மோடி கோயில் கட்டியுள்ளார்.  சரித்திரத்தில் என்றும் அழியா புகழ் பிரதமர் மோடிக்கு வந்து சேரும். இது யாரால் முடியும்? இந்தியா முழுமைக்குமான ஒரு கோவிலாக அயோத்தி ராமர் கோயிலை பிரதமர் மோடி கட்டியுள்ளார். ராமருக்காக அவர் பிறந்த இடத்திலேயே கோவில் கட்டியதை எவ்வளவு பாராட்டினாலும் தகும். ராமர் கோவில் நிகழ்வு பிரதமர் மோடிக்கு அழியா புகழைத் தேடி தரும். யாருக்கு கிடைக்கும் இந்த பாக்கியம்” என்றார்.