ஒரே காரில் வந்து விவாகரத்து கோரிய ஜி.வி.பிரகாஷ், மனைவி சைந்தவி!

இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் மற்றும் அவரது மனைவி சைந்தவி விவாகரத்து கோரி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.
தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளராக விளங்கி வருபவர் ஜி.வி.பிரகாஷ். இதேபோல் இவர் நடிகராகவும் பல்வேறு திரைப்படங்களில் நடத்தி வருகிறார். ஜி.வி.பிரகாஷ் பாடகி சைந்தவியை கடந்த 2013ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். கிட்டத்தட்ட 15 ஆண்டுகளாக இருவரும் சேர்ந்து வாழ்ந்து வந்த நிலையில், அவர்களது திருமண வாழ்க்கை முடிவுக்கு வரவுள்ளது. இருவரும் விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்தனர்.
ஒரே காரில் வந்து இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ், பாடகி சைந்தவி விவாகரத்து மனுத் தாக்கல் செய்தனர். சென்னை முதலாவது கூடுதல் குடும்ப நல நீதிமன்றத்தில் ஜி.வி.பிரகாஷ், சைந்தவி மனுத் தாக்கல் செய்துள்ளனர். இருவரும் மனமுவந்து பிரிவதாக தெரிவித்த நிலையில் வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.