நெஞ்சம் உடைந்தது... மருத்துவமனையில் கதறி அழுத ஸ்ரீகாந்த் தேவா..!
இசையமைப்பாளர் தேவா (76) சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் இன்று காலமானார்.
மனசுக்கேத்த மகராசா என்ற படத்தின் மூலம் 1989ம் ஆண்டு இசையமைப்பாளர் அறிமுகமானார் தேவா. அண்ணாமலை, பாட்ஷா உட்பட 450 படங்களுக்கு இசையமைத்துள்ளார். ரஜினி, கமல், விஜய், அஜித் உள்ளிட்டோருக்கு பல வெற்றிப் பாடல்களை கொடுத்துள்ளார். தமிழ் சினிமாவில் கானா பாடல்களை அறிமுகப்படுத்தியவர்
தன்னுடைய குரல் மற்றும் இசையினால் தனக்கென்று ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கிக் கொண்டவர். கடந்த சில தினங்களாக வயோதிகம் மற்றும் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த தேவா, திடீர் மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், மருத்துவர்கள் சுமார் 1 மணி நேரம் சிபிஆர் சிகிச்சை செய்துள்ளனர். எனினும் உடலில் நாடித்துடிப்பு நின்று போனதால் அவரது உயிர் பிரிந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
மருத்துவமனையில் இருந்த தேவாவின் மகன் ஸ்ரீகாந்த் தேவா தந்தை இறந்த துக்கம் தாங்காமல் கதறி அழுதார். இச்சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தேவா மறைவு... கதறி அழுத ஸ்ரீகாந்த் தேவா| #RIPDeva | #Deva https://t.co/aqId40ufl4
— PttvOnlinenews (@PttvNewsX) October 17, 2026
null

