ஒரு மணிநேரத்திற்கு முன் இபிஎஸ் கடிதம் எழுதிவிட்டு தவெகவில் இணைந்த முருகுமாறன்
அதிமுகவில் இருந்து விலகுவதாக அறிவித்த காட்டுமன்னார்கோவில் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. முருகுமாறன், அமைச்சர் ஆனந்த் முன்னிலையில் தவெகவில் இணைந்தார்.
அதிமுக முன்னாள் எம்எல்ஏ முருகுமாறன் அதிமுகவிலிருந்து விலகுவதாக ஒரு மணிநேரத்திற்கு முன் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதிய நிலையில், அதிமுகவில் இருந்து விலகுவதாக அறிவித்த காட்டுமன்னார்கோவில் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. முருகுமாறன், அமைச்சர் ஆனந்த் முன்னிலையில் தவெகவில் இணைந்தார்.
அதிமுகவின் கழக அமைப்புச் செயலாளராகப் பொறுப்பு வகித்துவந்த முருகுமாறன், 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் திட்டக்குடி (SC) தொகுதியின் அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுப் போட்டியிட்டார். கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயிலைச் சேர்ந்தவரான இவர், இளநிலை விவசாயப் பட்டமும் (B.Sc. Agriculture) மற்றும் திருப்பதி சிறீ வெங்கடேசுவரா பல்கலைக்கழகத்தில் இளநிலை சட்டப் பட்டமும் (B.L.) பெற்றுள்ளார். மேலும் இவர் விவசாயம் மற்றும் வழக்கறிஞர் தொழிலையும் செய்து வருகிறார் என்பது குறிப்பிடதக்கது.

