அமைச்சரவையில் மாற்றமா?.. ஆளுநருடன் தலைமைச் செயலாளர் முருகானந்தம் சந்திப்பு

 
ர்

அமைச்சரவையில் மாற்றம் செய்யப்படவிருப்பதாக தகவல் வெளியான நிலையில் ஆளுநர் ஆர்.என் ரவியை தலைமைச் செயலாளர் முருகானந்தம் சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார்.


தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற 27ம் தேதி அமெரிக்கா செல்ல இருக்கிறார். அதற்கு முன்னதாக தமிழக அமைச்சரவையில் சில மாற்றங்கள் செய்யப்பட இருப்பதாகவும், 3 மூத்த அமைச்சர்கள் பதவியில் இருந்து விடுவிக்கப்பட்டு, புதியவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட உள்ளதாகவும் செய்திகள் வெளியாகின. ஏற்கனவே உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக நியமிக்கப்படலாம் என்கிற  தகவலும் பரவலாக பேசப்பட்டு வந்தது. அமைச்சரவை மாற்றம் தொடர்பாக இன்று மாலை அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகும் என்றும் தகவல் வெளியானது. 

இந்நிலையில் அமைச்சரவையில் மாற்றம் செய்யப்படவிருப்பதாக தகவல் வெளியான நிலையில் ஆளுநர் ஆர்.என் ரவியை தலைமைச் செயலாளர் முருகானந்தம் சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார். தலைமைச் செயலாளராக பொறுப்பேற்றதற்கு ஆளுநரை சந்தித்து வாழ்த்து பெற்றார். அவருடன் தலைமைச் செயலாளருடன் பொதுத்துறை செயலாளர் ரீட்டா ஹரிஷ் தாக்கரும் உடன் சென்றுள்ளார்