மத்திய இணை அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் எல். முருகன்!
மத்திய இணை அமைச்சர் பதவியை எல். முருகன் ராஜினாமா செய்தார்.
மத்திய இணையமைச்சர் பொறுப்பில் இருந்து எல்.முருகன் ராஜினாமா செய்தார். மாநிலங்களவை எம்.பி. பொறுப்பில் இருந்தும் தம்மை விடுவிக்குமாறு பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார். 2030 வரை எம்.பி. பதவிக் காலம் இருக்கும் நிலையில், 2029 மக்களவை தேர்தலுக்காக தமிழ்நாட்டில் பாஜகவை வலுப்படுத்த கட்சிப் பணிக்கு திரும்புவதாக அறிவித்துள்ளார்.
பிரதமர் மோடி தலைமையில் இந்தியாவுக்கும், தமிழ்நாட்டுக்கும் சேவை செய்தது மாபெரும் கெளரவம் எனக் குறிப்பிட்டுள்ள எல்.முருகன், கூலித்தொழிலாளியின் மகனாக இருந்து, பிரதமர் மோடியின் அமைச்சரவையில் பணியாற்றியது பெருமை என தெரிவித்துள்ளார். மத்திய பிரதேசத்தில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்வானார். பின்னர் 2021க் மத்திய இணையமைச்சரானார்.2017 முதல் 2020 வரை தேசிய பட்டியலினத் தலைவராக பதவி வகித்த எல்.முருகன், 2020ல் பாஜக தலைவராக இருந்தார்.

